News Channel

மைதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போதையில்லா தமிழகம் – விழிப்புணர்வு பிரச்சாரம்


போதையில்லா தமிழகம் – விழிப்புணர்வு பிரச்சாரம்

20.08.2026 அன்று, “போதையில்லா தமிழகம்” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மேலக்காவரியில் உள்ள மைதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் வட்டத்தின் சார்பாக மாணவர்கள் மத்தியில் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது யூனுஸ் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளைத் தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களை நல்லொழுக்கத்துடனும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுடனும் செயல்படுமாறு ஊக்கப்படுத்தினார்.

மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.