News Channel

மது மற்றும் போதைக்கெதிரான விழிப்புணர்வு கூட்ட அறிக்கை

தேதி: 18-08-2026
கும்பகோணம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH), கும்பகோணம் சார்பில், இன்று மது மற்றும் போதைக்கெதிரான விழிப்புணர்வு கூட்டம் சத்தியச்சோலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சகோ. முகமது நாசர் புஹாரி, அய்யம்பேட்டை கிளைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பெண்கள் வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆண்கள் வட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது, மது மற்றும் போதைப் பொருட்களால் தனிமனிதர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இவ்விழிப்புணர்வை அனைத்து பகுதிகளிலும், அனைத்து மக்களிடத்திலும் விரைவாக கொண்டு செல்ல வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பெண்கள் மற்றும் ஆண்கள் வட்டப் பொறுப்பாளர்களும், போதை இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் முழுமையான ஒத்துழைப்பை வழங்க உறுதியளித்தனர்.