ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கும்பகோணம் கிளை சார்பில் 25.07.2026, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் நைல் நகர் பள்ளிவாசலில் "தனிமனித சீர்திருத்தத்திலிருந்து உம்மத்தின் எழுச்சியை நோக்கி..." என்ற கருப்பொருளில் தர்பியத் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜனாப். அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் தலைமை தாங்கினார். தொடக்கமாக மௌலவி அஹமது கபீர், B.A., இமாம், நைல் நகர் பள்ளிவாசல் அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, ஜனாப். T. அஜீஸ் லுத்துபுல்லாஹ், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் அவர்கள் "இயக்க முன்னோடிகளின் தியாகமும், அர்ப்பணிப்பும்" மற்றும் "தஜ்தீதே ஷஹாதத் – ஷஹாதத்தை புதுப்பித்தல்" ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்.
Dr. ஹஜ் மொய்தீன், மாநில செயலாளர், மனிதவள மேம்பாட்டுத் துறை (HRD) பொறுப்பாளர் மற்றும் திருச்சி அமீரே மக்காமீன் அவர்கள் "இயக்க ஊழியர்களாக உருவாவது எவ்வாறு?" மற்றும் "இயக்கமும், நாமும்" ஆகிய தலைப்புகளில் ஆற்றிய உரை பங்கேற்பாளர்களிடையே புதிய சிந்தனையையும் செயலூக்கத்தையும் ஏற்படுத்தியது.
S. சாகுல் ஹமீது, மாநில ஊடகத்துறை செயலாளர் மற்றும் திருப்பூர் அமீரே மக்காமீன் அவர்கள் "இயக்க ஊழியரில் Gen Z தலைமுறையும் ஊடகமும்" என்ற தலைப்பில் உரையாற்றி, இன்றைய தலைமுறையினரிடம் இஸ்லாமிய விழுமியங்களை ஊடகங்கள் மூலம் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக, "தஜ்தீதே ஷஹாதத் – ஷஹாதத்தை புதுப்பித்தல்" நிகழ்வின் ஒரு பகுதியாக, மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜனாப். T. அஜீஸ் லுத்துபுல்லாஹ் அவர்கள், புதிதாக இயக்க உறுப்பினர்களாக இணைந்த சகோதரர் ஹாஜா மாலிக் மற்றும் சகோதரர் முகமது ரியாஸ் ஆகியோருக்கு ஷஹாதத்தைப் புதுப்பித்து வைத்து, அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படுமாறு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வு பங்கேற்ற அனைவரிடமும் எழுச்சியையும் ஆன்மிக உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
பிற்பகல் அமர்வில் நடைபெற்ற சிறு தலைப்புகள் குறித்த கலந்துரையாடலில் ஜனாப். முகமது யூனுஸ், சகோதரி ரஹ்மத்து நிஷா, சகோதரி ரோஜா கனி, சகோதரி ஹசீனா யூசுப் மற்றும் ஜனாப். அப்துல் கலாம் ஆசாத் ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
காலை அமர்வை ஜனாப். ஹாஜா மாலிக் அவர்கள் தொகுத்து வழங்கினார். பிற்பகல் அமர்வை சகோதரி ரஹ்மத்து நிஷா அவர்கள் சிறப்பாக வழிநடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில், தர்பியத் நிகழ்ச்சியில் பகிரப்பட்ட சிந்தனைகளையும் வழிகாட்டுதல்களையும் தனிமனித வாழ்விலும், குடும்பத்திலும், சமூக மற்றும் இயக்கப் பணிகளிலும் நடைமுறைப்படுத்த அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.