News Channel

தியாகத் திருநாள் நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துவரங்குறிச்சி கிளையின் தியாகத் திருநாள் நிகழ்ச்சி இன்று (15.06.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமறை வசனத்தை சகோதரி ஜமீமா அவர்கள் வாசித்தார். நிகழ்ச்சியை சகோதரி வாஜிதா அவர்கள் வழிநடத்தினார். திருச்சி மண்டல அமைப்பாளர் ஜி. சையது முகமது சாஹிப் அவர்கள் சிறப்புரையாற்றினார். சகோதர சமுதாய மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டதுடன், ஜமாஅத்தின் பணிகள் பற்றியும் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 45 சகோதர சமுதாய மக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சகோதரி வாஜிதா அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சி முடிவில் சகோதர சமுதாய மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாணி விருந்து உபசரிப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.