News Channel

ரமளானின் நறுமணம் – வெள்ளலூரில் இருந்து சமூகத்துக்கு இஃப்தார் நோன்பு கஞ்சி பகிர்வு

கோவை வெள்ளலூரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் முஹாஜிரீன் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக, ரமளான் மாதத்தின் கருணை மற்றும் சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்தும் விதமாக சிறப்பான இஃப்தார் நோன்பு கஞ்சி விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக பேரூராட்சித் தலைவர், அரசு அலுவலர்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், முக்கியப் பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வியாபார நிறுவனங்கள் உள்ளிட்ட பலருக்கும் ரமளான் மாத இஃப்தார் நோன்பு கஞ்சி அவர்களின் பணியிடங்களுக்கே நேரடியாகச் சென்று வழங்கப்பட்டது.

இந்த முயற்சி, ரமளானின் உண்மையான செய்தியான பகிர்வு, அன்பு மற்றும் சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அனைவராலும் பாராட்டப்பட்டது.