News Channel

ஈகை திருநாள் சந்திப்பு – இதயங்களை இணைக்கும் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும். 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை, செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் பார்ட்டி ஹாலில் “இதயங்களை இணைக்கும் ஈகை திருநாள் சந்திப்பு” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தை Dr. C. பவுல்ராஜ் மற்றும் ஶ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் தலைமை குருக்கள் திரு S. ஜெகன் ராஜா குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர். மேடவாக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி சிவபூஷனம் ரவி மற்றும் திமுக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் R. S. லோகேஷ்வரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில அமைப்புச் செயலாளர் K. ஜலாலுதீன் அவர்கள் சிறப்புரையாற்றி, இந்தியாவில் வெறுப்பை அகற்றி அன்பை வளர்க்க இத்தகைய ஒன்றுகூடல்கள் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். மேலும், இறைவன் மனிதனை எப்போதும் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வை வளர்க்கவும், ஒருநாள் நாம் செய்த செயல்களுக்கு கணக்குக் கொடுக்க வேண்டியதைக் நினைவூட்டவும் ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சகோதர சமுதாயத்தினர் சுமார் 250 பேரும், இஸ்லாமியர்கள் 100 பேரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.