ஈரான் தூதரைச் சந்தித்த
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர்& மற்றும் நிர்வாகிகள்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தலைவர் சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி மற்றும்
துணைத் தலைவர் பொறியாளர் முஹம்மது சலீம்
தேசிய செயலாளர் ஐ.கரீமுல்லாஹ்I ஆகியோர், இந்தியாவிற்கான
Islamic Republic of Iran நாட்டின் தூதர்
Dr. Mohammad Fathali அவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பில்,
இந்தியாவில் Ali Khamenei அவர்களின் பிரதிநிதியாக உள்ள Ayatollah Dr. Abdul Majid Hakim Elahi மற்றும் உயர்தலைவரின் பிரதிநிதி அலுவலகத்தின் துணைப் பிரதிநிதி Hujjat al-Islam Agha Ziaei ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் போது, Ayatollah Ruhollah Khomeini அவர்களின் ஷஹாதத் (தியாக மரணம்) குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
ஆயத்துல்லாஹ் கோமேனி அவர்களின் தியாகம் உலகம் முழுவதும் நீதி மற்றும் சுதந்திரத்தை விரும்பும் மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்,
United States மற்றும் Israel ஆகிய நாடுகள் Iran மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை அவர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.
இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களையும் மனிதநேய நெறிமுறைகளையும் மீறும் செயல்கள் என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
ஈரான் மக்களுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்திய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர்,
அந்நாட்டு மக்களின் மனவலிமை, துணிச்சல் மற்றும் அநியாயத்துக்கு எதிராக அவர்கள் காட்டி வரும் உறுதியான எதிர்ப்பு மனப்பாங்கை பாராட்டினார்.
மேலும்,
தற்போதைய பதற்ற நிலைக்கு தீர்வு காண உரையாடல் மற்றும் தூதரக முயற்சிகள் மட்டுமே வழிவகுக்கும் என வலியுறுத்திய அவர்,
முழு பிராந்தியத்திலும் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமை நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.