இன்று 10.04.2026 வெள்ளி காலை 9.00 மணி முதல் 12 மணி வரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் கிளை ஏற்பாடு செய்த ஹோமியோபதி மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து நோய்களுக்கும் ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள்
என 98 பேர் பயனடைந்தனர்.
மகளிர் அணி உறுப்பினர்கள், முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பும் உதவியும் புரிந்தார்கள்.
ஹோமியோபதி மருத்துவர் அவர்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
அமீரே மகாமி முகமது காசிம் அவர்கள்
*அகிலத்திற்கோர் அருட்கொடை நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்*
புத்தகத்தை வழங்கினார்.
உடன் வந்த இரு செவிலியர்களுக்கு நஜிமா அம்சா பேகம்
அவர்கள் எங்கே அமைதி என்ற புத்தகத்தையும்
உறுப்பினர் ஜபின்பானு இஸ்லாம் மனித குலத்துக்கு வழங்கியது என்ன? என்கிற புத்தகங்களையும் வழங்கினார்கள்.
பஷீர் அகமது (முத்தவல்லி) அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொடுத்தார்.