கும்பகோணம் | 09.03.2026
கும்பகோணம் சத்தியச்சோலை உள் அரங்கத்தில்
ஜமாத்அதே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம் கிளை சார்பில்
மருத்துவர்களுக்கான இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு
ஜமாத்அதே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர்
ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் தலைமையேற்றார்.
நிகழ்ச்சியை சகோதரர் இன்ஜினியர் அப்துல் ரஹ்மான் அவர்கள் வழிநடத்தினார்.
நிகழ்ச்சி திருக்குர்ஆன் கிராஅத் மூலம் துவங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து
மாவட்ட அமைப்பாளர் ஜனாப் முகமது யூனுஸ் அவர்கள்
சத்தியச்சோலை பற்றிய அறிமுக உரையை வழங்கினார்.
மேலும்
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி மாநில தலைவர்
மெளலவி M.A. முஹம்மது ஹனீஃபா மன்பயீ அவர்கள்
சிறப்புரை ஆற்றி, ரமலானின் ஆன்மீகப் பயன்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் மனிதநேய சேவையின் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து
பங்கேற்பாளர்களுடன் கேள்வி–பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
2 பெண் மருத்துவர்களும், 8 ஆண் மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் ஜமாத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட
சுமார் 40 பேர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இறுதியாக
ரியாசுதீன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
பின்னர் அனைவரும் இணைந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இறைவனின் அருளால்
இந்த இப்தார் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.