பெண்கள் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி
உலக மனித உரிமைகள் தினம் (டிசம்பர் 10) முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) திருப்பூர் கிழக்கு முதலி பாளையம்
ஹவுசிங் யூனிட் மகளிர் அணி சார்பாக. 17.12.2023 ஞாயிறு மாலை 5 மணி முதல்
பெண்கள் பங்கு பெறும் *சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி* நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு JIH ஹவுசிங் யூனிட் பொறுப்பாளர் *S சகிலா பானு* தலைமை வகித்தார்.
மகளிர் அணி மாநகர பொறுப்பாளர் சகோதரி *A.ஹம்ஸா பேகம்* தலைமையுரை யாற்றினார் .
சிறப்பு விருந்தினராக. சட்டக்கல்லூரி மாணவி *M.பாத்திமா BBA.,LLB*
அவர்கள் கலந்து கொண்டு *மனித மதிப்போம்* என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
அவரது உரையில் இன்று சமூகத்தில் நடைபெறும் பல்வேறு உரிமை மீறல்களை குறித்தும்
அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து எப்படி நாம் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக உரை நிகழ்த்தினார். மேலும் *பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்*
என்ற தலைப்பில் *நாடகம்* நடைபெற்றது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் & அநீதிகளை விவரிக்கும் நாடகம் ஒன்றை *GIO* மாணவிகள் சகோதரிகள் அரங்கேற்றினார்கள். மேலும்
*இன்றைய காலத்தில் மனிதநேயம் வளர்கின்றதா? தேய்கின்றதா?* என்ற தலைப்பில் *சிறப்பு பட்டிமன்றம்* நடைபெற்றது.
பட்டிமன்றத்தில் JIH சகோதரிகள் மிகச் சிறப்பாக தனது வாதங்களை முன் வைத்தார்கள்.
பட்டிமன்றத்தையும் சிறப்பாக நடத்தினார்கள்.
சிறப்புரை மற்றும் *நாடகம்&பட்டிமன்றம்* நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு மற்றும் சிறந்த சிந்தனைகளை ஏற்படுத்தியது.
70-க்கும் மேற்பட்ட சகோதரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
சகோதரி *S.நிலோபர் நிஷா* அவர்களின் நன்றியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
சகோதரி *நசீமா* அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பாக வழி நடத்தினார்கள்.