கும்பகோணம் | 22.02.2026 (ஞாயிற்றுக்கிழமை)
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பு அமைப்பான
மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)
சார்பாக,
சகோதர சமூக இளைஞர்களுக்கான மாபெரும் இப்தார் நிகழ்ச்சி
இன்று மாலை 5:30 மணிக்கு
கும்பகோணம் நைல் நகர் பள்ளிவாசலில்
சிறப்பாக நடைபெற்றது. “இஸ்லாத்தை தெரிந்து கொள்வோம்” என்ற தலைப்பில்
இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக வந்திருந்த அனைத்து மாணவர்களுக்கும் இஸ்லாத்தின் அடிப்படை கருத்துகள், நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து
காட்சி அரங்குகள் (Exhibition) மூலம்
விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்த காட்சி அரங்குகளில்
SIO மாணவர்கள் நேரடியாக விளக்கம் அளித்து, சகோதர சமூக மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை வழங்கினர்.
சரியாக மாலை 6:30 மணிக்கு
நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து
தொழுகை நடைபெற்றது. இதன் மூலம்
சகோதர சமூக மாணவர்கள்
முஸ்லிம்கள் எவ்வாறு தொழுகின்றார்கள் என்பதை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து,
“இஸ்லாத்தை தெரிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் முக்கிய அரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி
SIO மாவட்ட பொறுப்பாளர்
சகோதரர் அஸ்ஸலாம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை சகோதரர் அஹமது தஸ்லீம் அவர்கள் மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம் கிளை தலைவர்
ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள்
முன்னிலையாக இருந்து வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து,
“இஸ்லாத்தை தெரிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – மண்டல பொறுப்பாளர்
ஜனாப் முகமது யூனுஸ் அவர்கள்
மிகவும் விளக்கமான
சிறப்புரையை ஆற்றினார்.
பின்னர், மாணவர்கள் எழுப்பிய
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு
விரிவான பதில்கள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியாக,
SIO கும்பகோணம் பொறுப்பாளர்
நன்றி உரை வழங்க, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில்
சுமார் 300-க்கும் மேற்பட்ட சகோதர சமூக மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு
இஸ்லாத்தை நேரடியாக அறிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக
கடந்த ஐந்து நாட்களாக SIO மாணவர்கள்
மிகுந்த ஈடுபாட்டுடன் பங்காற்றி,
டிஜிட்டல் மீடியா விளம்பரங்கள் மூலம்
அதிகமான சகோதர சமூக மாணவர்களை
ஒருங்கிணைத்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும்
ரிட்டன் கிப்ட் மற்றும் இரவு உணவு
வழங்கப்பட்டது.
பங்கேற்ற மாணவர்கள் அனைவரும்,
“நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது”
என்று தங்களின்
நன்றியும் ஃபீட்பேக்கும் தெரிவித்ததுடன்,
இதேபோன்ற நிகழ்ச்சிகளை
மீண்டும் மீண்டும் நடத்துமாறு
SIO அமைப்பை கேட்டுக் கொண்டனர்.