News Channel

திருச்சி கூனிபஜார் ஊழியர்கள் வட்டம் சார்பாக ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்ல சந்திப்பு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கூனிபஜார் ஊழியர் வட்டம் சார்பாக துறையூர் அருகே உள்ள ஆலயுடையான்பட்டி-ல் அமைந்துள்ள தாருல் முஹப்பா ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்ல சந்திப்பு இன்று 17/12/2023 நடைபெற்றது.

 இல்லத்திற்கு சென்ற ஊழியர்களை அதன் நிறுவனர் மௌலவி.முஹம்மது சுப்யான் அவர்கள் வரவேற்றார்.

ஆதரவற்றோர் இல்லத்தில் எத்தகைய மக்கள் தங்கி உள்ளனர், எத்தகைய கடுமையான சூழ்நிலையில் அந்த இல்லத்தை நிர்வகித்து வருகிறார் என்பதை விளக்கினார்.

 அங்கு உள்ளவர்களுக்கு ஆடைகளையும், மதிய உணவையும் ஊழியர்கள் பகிர்ந்து கொண்டு, நம்மை உடல் நலத்துடன் மிகச் சிறந்த பாதுகாப்பாளானாக அல்லாஹ் இருந்து வருகிறான் என்பதை உணர்ந்து ஊழியர்கள் அவனுக்கு நன்றி செலுத்திய வன்னம் திரும்பினர்...