News Channel

இறை இல்லத்தில் சமூக நல்லிணக்க சகோதரத்துவ சந்திப்பு நிகழ்ச்சி

கடந்த 06-12-25, சனிக்கிழமை 
 நெல்லித்தோப்பு மசூதியை பார்வையிட வந்த புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்க நடை பயண குழுவை அன்புடன் வரவேற்று கலந்துரையாடல் நடைபெற்றது, மேலும் பள்ளிவாசலில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

முன்னதாக, பள்ளிவாசல் முத்தவல்லி சகோ. சுப்ஹான் பாய் அனைவரையும் வரவேற்று, இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற நல்லிணக்க பயணம் நடைபெற வேண்டும், ஒருவர் மற்றோருவரை புரிந்துகொள்ள வேண்டும், அனைவரும் நல்லிணக்கமாக வாழவேண்டும், என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்வில் புதுச்சேரி பகுதியை சார்ந்த மத நல்லிணக்கத்தை விரும்பக்கூடிய பல சமயங்களை சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி வரலாற்று ஆசிரியர் கவிஞர் கலைமாமணி நா. இராசசெல்வம், பேசும் போது தனது சமகால நிகழ்வுலகை, இதர மத நண்பர்களுக்கு இஸ்லாம் வலியுறுத்தும் கோட்பாடுகளை அழகான முறையில் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் சிற்றுரை ஆற்றிய சகோ. அன்வர் அலி, பள்ளிவாசலில் நடைபெறும், வணக்க வழிப்பாட்டு முறைகள், அனைவரும் ஒன்றாக சேர்ந்து இறைவனை வணக்கும் கூட்டு தொழுகை, அதன் முக்கியத்துவம், பள்ளிவாசலில் நடைபெறும் இன்ன பிற சமூக சேவைகள் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக மக்ரிப் தொழுகை நிகழ்வை விருந்தினர்கள் அனைவரும் பள்ளிவாசலின் உள்ளே சென்று பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பல நாட்களாக உள்ளே வர விருப்பமாக இருந்ததாகவும், அந்த கனவு இன்று நினைவாகியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

புதுச்சேரி வரலாற்று ஆசிரியர் கவிஞர் கலைமாமணி நா. இராசசெல்வம் அவர்களுக்கு சமரசம் அறிமுகம் செய்யப்பட்டு அண்டை வீட்டார் பரப்புரை சிறப்பிதழ் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.