News Channel

Programme About Palestine Issue

பாலஸ்தீனம் தரும் படிப்பினை இஜ்திமா

அல்ஹம்துலில்லாஹ்
 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக 24.11.2023 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகை முதல் இஷா தொழுகை வரை பழையபேட்டை பூரா மஸ்ஜிதில் பாலஸ்தீனம் தரும் படிப்பினை என்ற தலைப்பில் இஜ்திமா நடைபெற்றது.

 துவக்கமாக பூரா மஸ்ஜித் இமாம்,கதீப் மௌலவி உவேஸ் அஹ்மத் மதனி இறைவசனம் ஓதினார்.

 பூரா மஸ்ஜித் தலைவர் ஜனாப் ஜாவித் பாஷா தலைமையில் நகரின் மற்ற மஸ்ஜித்கள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

 மாவட்ட அரசு காஜி ஹஸ்ரத் மௌலானா முப்தி கலில் அஹ்மத் அவர்கள் பனுஇஸ்ராயில் வரலாறு மூசா(அலை) முதல் இசா (அலை) வரை யூதர்களுக்கு அல்லாஹ் அருளிய அருட்கொடைகள் அவர்கள் செய்த அக்கிரமங்கள் அநியாங்கள் ஆகியவை பற்றி குர்ஆன் ஹதீஸ் மூலமாக முழுமையாக எடுத்துரைத்தார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் படேல் முஹம்மத் யூசுப் சாஹேப் அவர்கள்  கிமு முதல் உமர் (ரலி) அவர்கள் வெற்றி கொள்ளப்பட்டது சுல்தான் சாலாஹீத்தீன் அய்யூபி மஸ்ஜிதே அக்ஸா வெற்றி கொள்ளப்பட்டது மஸ்ஜிதே அக்ஸா மீது ஏன் அவர்களுக்கு பிரியம் யூதர் எவ்வாறு சிறுக சிறுக குடி அமர்த்தப்பட்டனர் 1948 இல் எப்படி பாலஸ்தீனம் இஸ்ரேல் நாடுகள் பிரிக்கப்பட்டது அதன் பிறகு நடைபெற்ற ஆக்கிரமிப்புகள் யூதர்களிடத்தில் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளை அவர்கள் வசம் திருப்பிய ஆகியவை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்

200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.  எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே