News Channel

திருப்பூர் நாச்சி பாளையம் அரசு நூலகத்திற்கு CIO குழந்தைகள் விஜயம்..

                                                                     CIO குழந்தைகள் அரசு நூலகம் விஜயம்

திருப்பூர் கிழக்கு முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்
மகளிர் அணி சார்பாக
25.11.2023 சனிக்கிழமை காலை 10 மணியளவில் 
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு

நாச்சி பாளையம் 
அரசு நூலகத்திற்கு
குழந்தைகள் இஸ்லாமிய அமைப்பு(CIO) குழந்தைகளை அழைத்துச் சென்று
நூலகம் காண்பிக்கப்பட்டது.

நூலகம் என்றால் என்ன!
நூலகம் இயங்கும் முறை
நூலகத்தின் பலன்கள்
வாசிப்பின் முக்கியத்துவம்
குறித்து அறிமுகம் செய்து வைத்தார்
 மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி சகீலா பானு அவர்கள்.

குழந்தைகள் அனைவரும் நூலகத்தை பார்வையிட்டு புத்தகங்களை எடுத்து வாசித்தார்கள்.
சில குழந்தைகள் புத்தகத்திலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டார்கள்.

நூலகப் பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியதோடு, குழந்தைகள் மிக அமைதியாக புத்தகங்களை வாசிக்கிறார்கள். இதுபோன்று பணிகள் மிகச் சிறப்பான பணி என்று 
வரவேற்று 
தங்கள் மகிழ்ச்சியையும் தெரிவித்து,
குழந்தைகளை அடிக்கடி நூலகத்திற்கு அழைத்து வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில்
CIO குழந்தைகள்,
பெற்றோர்கள்,
மகளிர் அணி சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

தகவல்:
CIO tirupur media team