News Channel

அண்டை வீட்டார் பரப்புரை நிகழ்வு அறிக்கை

விருதுநகர்: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) அமைப்பு, நாடு தழுவிய 'அண்டை வீட்டார் பரப்புரை நிகழ்வை' நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் சீதக்காதி தெருவில் உள்ள அரசு உதவிபெறும் HSHB பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு 21/11/2025 அன்று நடைபெற்றது.

அல்லாஹ்வின் கருணையால் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, விருதுநகர் பெண்கள் வட்டப் பொறுப்பாளர் சகோதரி அனிசா ஹுசைனா அவர்கள் தலைமை தாங்கினார். அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து சகோதரி பவுசியா அவர்கள் உரையாற்றினார்.
உரைக்குப் பிறகு, பள்ளி மாணவிகளிடையே அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணுவது தொடர்பான உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழியை மெஹர் பானு அவர்கள் வாசித்தார்.

நிறைவில், செய்யதலி காதர் மற்றும் பெண் ஊழியர்கள் மாணவிகளுக்கு இனிப்புக்களையும், மடற்கோலைகளையும் வழங்கினர். மேலும், பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சமரசம் மடற்கோலைகள், ‘அண்டை வீட்டார் உரிமைகள்’ என்ற புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.
சமூகத்தில் அண்டை வீட்டார் நல்லுறவைப் பேணும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்நிகழ்வு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.