அண்டை வீட்டார் உரிமைகள்- மணப்பாறை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மணப்பாறை கிளையின் சார்பாக அண்டை வீட்டார் உரிமைகள் எனும் பரப்புரையின் ஒரு பகுதியாக மணப்பாறையில் உள்ள ஆலிம் பெருமக்களுக்கான
கலந்துரையாடல் 18.11.2025 அன்று
காலை 8 மணியளவில்
நடைபெற்றது.
JIh மண்டல பொறுப்பாளர் ஜனாப் சையத் முகமது அவர்கள் நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார்.
மணப்பாறை பகுதியை சார்ந்த இமாம்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களிடம்
அண்டை வீட்டார் உரிமைகள் குறித்து
பரப்புரையின்
ஜும்மா உரை கையேடு வழங்கப்பட்டது.
மக்கள் மத்தியில் அண்டை வீட்டார் உரிமைகள் குறித்து வரும் ஜும்மா மேடைகளில் உரை நிகழ்த்துமாறும்
தற்கால சூழ்நிலைகளில் அதன் அவசியத்தையும் வலியுறுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
கலந்துரையாடலை மணப்பாறையின் கன்வீனர்
ஜாபர் உசேன் மன்பயீ ஒருங்கிணைத்தார்.
திருச்சி மாவட்ட ராபித்தத்துல் உலமா பொறுப்பாளரும் அஸ்ஸலாம் கல்லூரியின் அரபி பேராசிரியருமான மௌலவி அப்துல் ஹசிப் பாகவி அவர்கள் கலந்துகொண்டு அண்டை வீட்டார் உரிமைகள் பற்றிய இந்த பரப்புரையின் நோக்கங்களை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
அஸ்ஸலாம் கல்லூரியின் அரபி விரியுரையாளர் நிஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆலிம்கள் அனைவரும் இந்த கருத்தை வரும் வெள்ளி மேடைகளில் மக்களுக்கு வலியுறுத்த இசைந்தார்கள்.
நிறைவாக மணப்பாறை கிளையின் தலைவர் ஜபருல்லா அவர்கள் செயல் திட்டத்தை விளக்கி நன்றியுரை ஆற்றினார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!