News Channel

சமூகப் பிரமுகர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்-ன் அகில இந்திய துணைத் தலைவர் மாலிக் முஃதஸிம் கான் அவர்கள் கோவை மாநகருக்கு வருகை தந்ததையொட்டி சமூகப் பிரமுகர்களுக்கான  ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. 20 நவம்பர் 2023, திங்கள் கிழமை அன்று ஆனந்தம் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. 

அறுபதுக்கும் மேற்பட்ட சமூகப் பிரமுகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் ஜமாஅத்தின் அகில இந்திய துணைத் தலைவர் மாலிக்  முஃதஸிம் கான் அவர்களும், ஜமாஅத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி ஹனீஃபா மன்பஈ அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

மரியாதைக்குரிய மாலிக்  முஃதஸிம் கான் அவர்கள் பேசும்பொழுது தற்போதைய இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓட்டுரிமையை சரியாகப் பயன்படுத்திட உறுதியேற்க வேண்டும். அனைவரும் ஓட்டுரிமையைப் பெற்றிட அடையாள அட்டை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்திட வேண்டும். மேலும் அனைவரும் பாசிசத்திற்கு எதிராக தங்களுடைய விரல்களை உயர்த்திட வேண்டும். நூறு சதவிகிதம் ஓட்டு மக்கள் ஒட்டு போடுவதை சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் நாம் பணி செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் முஸ்லிம் சமூகம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கூட்டாக எதிர்கொள்ள வியூகங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஜமாஅத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஜனாப். ஜலாலுதீன் சாஹிப் அவர்களும், மாநில துணைத் தலைவர் ஜனாப். யூசுப் பாஷா அவர்களும், மாநில செயலாளர் ஜனாப். சிக்கந்தர் அவர்களும், கோவை பெருநகர தலைவர் ஜனாப். உமர் பாரூக் அவர்களும், செயலாளர் ஜனாப். சபீர் அலி அவர்களும் கலந்து கொண்டனர்.