"பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி "
அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரை குறித்து
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு& புதுச்சேரி சார்பாக
பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று 18.11.2025 செவ்வாய்க்கிழமை
காலை 12 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
மாநிலத் தலைவர்
மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பயீ அவர்கள் கலந்து கொண்டு
பரப்புரையின் நோக்கம் குறித்து விரிவாக பத்திரிக்கையாளர்கள் முன்பு எடுத்துரைத்தார்.
மேலும் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டார்கள்.
- ஏன் இந்த பரப்புரையை நடத்துகிறீர்கள்?
- இது அரசியல் சார்ந்த நிகழ்ச்சியா?
- இது முஸ்லிம்களுக்கு மட்டுமா? முஸ்லிம் அல்லாத எல்லோருக்குமானதா?
- பரப்புரையில் என்னெல்லாம் செய்ய இருக்கிறீர்கள்?
- எல்லா ஜமாஅத்தும் சேர்ந்து செய்கிறீர்களா?
- இது அகில இந்திய பரப்புரையா தமிழக பரப்புரையா?
- தமிழ்நாடு நல்ல உறவுகளை பேணித் தானே இருக்கிறது எதற்காக இங்கு இதை செய்கிறீர்கள்?
என்று பல்வேறு கேள்விகளை கேட்டார்கள்.
அனைத்து கேள்விகளுக்கும் விரிவான பதில்களை
மாநிலத் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந் நிகழ்வில்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் துணைத் தலைவர்
முஹம்மது யுசுப் பாஷா,
மாநில அமைப்புச் செயலாளர் கே.ஜலாலுதீன்
மாநில மகளிர் அணி செயலாளர்
சகோதரி பாத்திமா ஜலால்
சென்னை மெட்ரோ தலைவர்
நஜீர் அத்தாவுல்லாஹ்
மற்றும்
சென்னை மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி ராஹிலா
அண்டை வீட்டார் பரப்புரை அமைப்பாளர் S.சாகுல் ஹமீது
ஜமாஅத்தின் உறுப்பினர்&ஊழியர்கள் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.