"பத்திரிக்கை செய்தி"
13 நவம்பர் 2025
குழந்தைகள் தினத்தில் CIO.
சிறுவர் நலன், பாதுகாப்பு, வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை.
புது தில்லி: இந்தியாவின் குழந்தைகள் இஸ்லாமிய அமைப்பு (CIO) நாட்டின் பல்வேறு நகரங்களில் குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகிறது.
இந்நிகழ்வையொட்டி, சி.ஐ.ஓ.வுடன் இணைந்த மாணவர்கள் நகர நிர்வாகங்களுக்கு உடனடி நடவடிக்கை கோரி மனுவொன்றை வழங்கி வருகின்றனர்.
இதன் மூலம் சிறுவர் நலன், வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
நகரத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும், சமூக சூழலை நேர்மறையாக்குவதற்கும் நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகளை இவ்வமைப்பு பாராட்டியது.
அதேநேரம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நலனைப் பாதிக்கும் பல முக்கியப் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டியது.
மனுவில் பின்வரும் கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன:
1. பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களின் வழங்கல் மற்றும் பராமரிப்பு:
குழந்தைகளுக்கென அதிகமான பொது பூங்காக்களையும் விளையாட்டு மைதானங்களையும் உருவாக்க வேண்டுமெனவும்,
ஏற்கனவே உள்ளவற்றை ஊஞ்சல் போன்ற பொழுதுபோக்கு வசதிகளுடன் சிறப்பாகப் பராமரிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டது. இது குழந்தைகளின் உடல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவும்.
2. கல்வி உரிமைச் சட்டத்தின் பயனுள்ள அமலாக்கம்:
கல்வி உரிமைச் சட்டம் முழுமையாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இது பொருந்தும்.
3. தெரு நாய்கள் குறித்து:
நகரில் அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கை குழந்தைகளிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக சி.ஐ.ஓ. தெரிவித்தது.
எனவே, விலங்குகள் உரிமைகளை மதித்து, மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
4. குழந்தை பாதுகாப்பிற்கான மேம்பட்ட சட்டம் ஒழுங்கு:
பள்ளிக்கு அச்சமின்றி செல்லவும், சுதந்திரமாக நடமாடவும் குழந்தைகளைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தப்பட்டது.
5. கல்வி நிறுவனங்களில் சமத்துவம் மற்றும் பாகுபாடு ஒழிப்பு:
பள்ளிகளில் மதம், சாதி, நிறம் அல்லது பொருளாதாரப் பின்னணி அடிப்படையில் எவ்வித பாகுபாடும் காட்டப்படக் கூடாது எனவும், அனைத்து குழந்தைகளுக்கும் சமமானதும் மதிப்புமிக்கதுமான கல்விச் சூழல் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது.
மனுவின் இறுதியில், குழந்தைகள் இஸ்லாமிய அமைப்பு (CIO) நிர்வாகம் இக்கோரிக்கைகளின் மீது உடனடியாகவும் பயனுள்ள வகையிலும் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தது.
இதன் மூலம் நம் குழந்தைகள் பாதுகாப்பான, ஆரோக்கியமான, செழிப்பான சூழலில் வளர்ந்து, நாட்டின் பொறுப்புமிக்க குடிமக்களாக உருவாக முடியும்.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலர், ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
புது தில்லி.