29 அக்டோபர் 2025
பத்திரிக்கை செய்தி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் உயர்மட்டத் தேசியக் குழு பரேலி (உத்தரப் பிரதேசம்)சென்று நிலைமையை ஆய்வு செய்தது.
பரேலியில் சமீபத்தில் நடைபெற்ற தன்னிச்சையான கைதுகள், இடிப்பு அறிவிப்புகள், வணிக நிறுவனங்களை மூடி சீல் வைத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து நிலைமையை மதிப்பிடுவதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் (ஜமாஅத்) உயர்மட்டத் தேசியக் குழு பரேலி சென்றது.
குழுவை ஜமாஅத்தின் தேசியத் துணைத் தலைவர் மாலிக் மொத்தசிம் கான் தலைமையேற்றார்.
இதில் ஐ. கரீமுல்லா, நதீம் கான், லயீக் அஹ்மத், ஜமீருல் ஹசன் (ஜமாஅத் உத்தரப் பிரதேச மேற்கு மாநிலத் தலைவர்) ஆகியோருடன் பல வழக்கறிஞர்களும் ஜமாஅத்தின் பிற அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை குழு நேரில் சென்று பார்வையிட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உரையாடியது.
இன்னும் தடுப்புக்காவலில் உள்ள குழந்தைகளைப் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் துயரமான நிலைமைகளை கவனத்தில் கொண்டது.
சட்டப்படியான செயல்முறை இன்றி இடிப்பு மற்றும் சீல் வைப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும், செல்லுபடியாகும் உரிமை ஆவணங்களும் டிஜிட்டல் ஆதாரங்களும் இருந்தபோதிலும், சம்பவ நாளில் பல குற்றம்சாட்டப்பட்டவர்கள் அங்கு இல்லை என்பதும் அவர்களுக்கு சட்டம்-ஒழுங்கு குழப்பத்தில் எவ்விதப் பங்கும் இல்லை என்பதும் உறுதியாகத் தெரிந்தும்,
தன்னிச்சையான காவல் துன்புறுத்தலும் அரசியல் பழிவாங்கலும் தொடர்கின்றன என்பதும் கண்டறியப்பட்டது.
வழக்கறிஞர்களுடன் சட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்த குழு,
உரிய சட்டத் தீர்வுகளை ஆராய்ந்து,
அரசியலமைப்பு வழிமுறைகளின் மூலம் நீதியை நிலைநாட்ட முயன்றது.
மாவட்ட ஆட்சியரையும் (டிஎம்) காவல் கண்காணிப்பாளரையும் (எஸ்பி) சந்தித்து கவலைகளை முன்வைக்க முயன்ற போதிலும்
நிர்வாகத்தின் பதில் நேர்மறையாக இல்லை.
நீதி, அரசியலமைப்பு மதிப்பீடுகள், அமைதியான பொதுமக்கள் ஈடுபாடு ஆகியவற்றில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுதியாக உள்ளது.
ஜமாஅத் துணைத் தலைவர் மாலிக் மொத்தசிம் கான், அரசியல் உள்நோக்கம் கொண்ட எப்ஐஆர்களை உடனடியாகத் திரும்பப் பெறுதல், நம்பகமான ஆதாரம் இன்றி தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவித்தல்,
காவல் அதிகாரங்களுக்கான நீதித்தன்மை பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
அதிகாரிகளிடம் பக்கச்சார்பற்ற விசாரணை, பொதுமக்கள் உரிமைகளின் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் ஆகியவற்றை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
APCR தேசியச் செயலர் நதீம் கான் கூறுகையில்,
27 குடும்பங்களுக்கு வீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
32 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
APCR அந்தக் கடைகளின் வழக்குகளை கையாள்கிறது. நீதிமன்றங்கள் உடனடி நிவாரணமும் அப்பாவிகளுக்கு நீதியும் வழங்கும் என நம்புகிறோம்.
இந்த இக்கட்டான தருணத்தில், மக்கள் உறுதியாகவும் ஒன்றுபட்டும் நின்று, எல்லா இடர்களையும் எதிர்த்து, அரசியலமைப்பு மற்றும் சட்ட வழிமுறைகள் வாயிலாக நீதிக்கான போராட்டத்தைத் தொடருமாறு ஜமாஅத் அழைப்பு விடுக்கிறது.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலர், ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
புது தில்லி