ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஓசூர் கிளையின் சார்பாக வெற்றியின் பக்கம் வாருங்கள் ( ஹைய்ய அலல் ஃபலாஹ்) என்ற சிறப்பு நிகழ்ச்சி நேற்று (26.10.25) ஞாயிறு மாலை நடைபெற்றது.
குர்ஆன் கிராஅத்
ஓதி மௌலவி முஹம்மது சிராஜ் ( மினா பள்ளி இமாம்) அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி
வைத்தார்கள்.
ஓசூர் வட்டப பொறுப்பாளர் முஹம்மது ஆரிப்
நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வரவேற்று வெற்றியின் பக்கம் வாருங்கள் என்ற தலைப்பின்
நோக்கத்தை எடுத்துரைத்தார்.
அதன் பின்
சிறப்பு பேச்சாளர் ஜனாப் அப்துல் ஹமீது (மண்டல அமைப்பாளர் JIH) அவர்கள் குர்ஆன் வெற்றிக்கான வழிகாட்டி என்பதை
அழகாக படம் பிடித்துக் காட்டினார்.
குர்ஆன் முஸ்லிம்களின் வாழ்வில் எவ்வாறு இரண்டறக் கலந்திட வேண்டும் என்பதை எடுத்துரைத்து குர்ஆனுடன் நமது
தொடர்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்
வாணியம்பாடியில்
இருந்து வந்திருந்த சிறப்பு பேச்சாளர் ஜனாப் அத்தீக் குர் ரஹ்மான் ( ஜன சேவா வங்கி
துணை மேனேஜிங் டைரக்டர்) அவர்கள் நிகழ்ச்சியின் மைய கருத்தான வெற்றியின் பக்கம்
வாருங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்தத் தலைப்பு நமக்கு உணர்த்துவது என்ன, வெற்றியை நோக்கி
நமது பயணம் எவ்வாறு அமைய வேண்டும்,
மேலும் மறுமையில் வெற்றி
பெறுவதுடன் இம்மையிலும் வெற்றி பெறுவது எப்படி என்பதை அழகாக கோடிட்டு காட்டினார்.
இந்நிகழ்ச்சியில்
ஆண்களும் பெண்களும் ஆக சுமார் 50 பேர் கலந்து
கொண்டனர்.