அஸ்ஸலாமு
அலைக்கும். இன்று ( 20.10.2025) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஜமாஅத்
தே இஸ்லாமி ஹிந்த் ஓசூர் சார்பில் ஓசூர் பகுதி உலமாக்களுக்கான கலந்துரையாடல்
அமர்வு நடைபெற்றது. இதில் பங்கு பெறுவதற்காக ராபிதத்துல் உலமா (உருது பிரிவின்)
பொறுப்பாளர் ஹாபிஸ் முஹம்மது சமியுல்லா உமரி, (திருப்பத்தூர்) மௌலவி இர்ஷாத் உமரி (வாணியம்பாடி) அவர்களும் வருகை தந்தார்கள்.
ஓசூர்
உலமாக்களில் மதினா மஸ்ஜித் இமாம் மௌலவி முஹம்மது ஷாஹித், மினா மஸ்ஜித்
இமாம் மௌலவி முஹம்மது சிராஜ், துணை இமாம்,
நிம்ரா பள்ளி இமாம் மௌலவி ரியாசுத்தீன்,
சித்தீக்கா மஸ்ஜித் இமாம் மௌலவி முஹம்மது ஆரிப்,
பிஸ்மில்லா நகரில் மதரஸா நடத்தி வரும் மௌலவி
முஹம்மது சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மௌலவி சிராஜ்
அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி துவக்கி வைத்தார். ஓசூர் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் நாஸிம்
முஹம்மது ஆரிப் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி வந்து இருந்த
உலமாக்களை வரவேற்றார்.
அடுத்து பேசிய
ஹாபிஸ் மௌலவி முஹம்மது சமியுல்லா உமரி
அவர்கள் ராபிதத்துல் உலமா நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். மேலும்
ராபிதத்துல் உலமா வருமா ஆற்றி வரும் பணிகள் சிலவற்றை உதாரணங்களாக வரிசைப்
படுத்தினார். மேலும் ஓசூரில் உள்ள உலமாக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன்
அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அடுத்ததாக பேசிய
மௌலவி இர்ஷாத் உமரி அவர்கள் உலமாக்கள் உடைய பணி ஜூம்மா பயானை தாண்டி ஜும்மா
தொழுகைக்கு பின்பும் பொது மக்கள் உடன் சில
நிமிடங்கள் கலந்துரையாடல் செய்வது எப்படி பயனளிக்கும் என்பதை தனது அனுபவத்தின்
மூலம் பகிர்ந்து கொண்டார். பொது மக்கள் குறிப்பாக இளைஞர்களை தங்களுடைய தொடர்பில்
வைத்திருப்பதன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்று பதிவு செய்தார்.
பிறகு வந்திருந்த அனைத்து உலமாக்களும் தங்களுடைய பகுதியில் உள்ள மக்கள்
பிரச்சனைகளையும் அவற்றை போக்க தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும்
எடுத்துரைத்தனர். இறுதியில் அனைவரும்
குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்திக்க முயற்சி செய்வது என்று முடிவு
செய்யப்பட்டது. நாஸிம் முஹம்மது ஆரிப் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உலமாக்களுக்கும் மதிய உணவு வழஙகி
கௌரவிக்கப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே