15 அக்டோபர் 2025
பத்திரிகை அறிக்கை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி
உமீத் இணையதளத்தில்
வக்ஃப் பதிவை விரைவுபடுத்துவதற்காக வக்ஃப் உதவி மையத்தை தொடங்கி வைத்தார்.
வக்ஃப் சொத்துக்களின் விவரங்களை பதிவேற்றுவதையும், அரசாங்கத்தின் “உமீத் இணையதளத்தில்” அவற்றின் பதிவை முடிப்பதையும் விரைவுபடுத்துவதற்காக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமையகத்தில் வக்ஃப் உதவி மையம் (பின்புல ஆதரவு அமைப்பு) தொடங்கப்பட்டது.
இந்த உதவி மையத்தின் மூலம், வக்ஃப் சொத்துகளின் நிர்வாகிகள் (முத்தவல்லிகள்), பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் மத நிறுவனங்களின் நிர்வாகிகள் நேரடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
இந்த உதவி மையத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி தொடங்கி வைத்தார்.
தொடக்க உரையில்
சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி கூறுகையில்,
“வக்ஃப் சொத்துகளைப் பாதுகாப்பது முழு முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு முக்கியமான சவாலாக உள்ளது.
இந்த சவாலை ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
ஜமாஅத்தே இஸ்லாமியின் வக்ஃப் துறை நீண்ட காலமாக இத்துறையில் பணியாற்றி வருவதாகவும், மத்திய அளவில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் பதிவு பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், “வக்ஃப் சொத்துகளை பதிவு செய்ய சமூகத்திற்கு மிகக் குறைவான கால அவகாசமே உள்ளது.
மேலும் இது ஒரு பெரிய பணியாகும்.
எனவே பதிவு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு நாடு முழுவதும் இதுபோன்ற மையங்களை அமைப்பது அவசியமாக உள்ளது என்று அவர் கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைக் குறிப்பிட்ட அவர், வக்ஃப் சொத்து ஆவணங்களை WAMSI (வக்ஃப் சொத்து மேலாண்மை அமைப்பு) இணையதளத்தில் பதிவேற்றி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதிவை முடிப்பது இப்போது இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.
பதிவு செய்வது என்பது அநியாயமான வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதாக அர்த்தமல்ல என்று ஹுசைனி தெளிவுபடுத்தினார்.
பதிவு செய்வதோடு, இந்த அநியாய சட்டத்திற்கு எதிரான சட்டரீதியான போராட்டமும் தொடரும் என்று அவர் உறுதியாகக் கூறினார்.
உதவி மையத்தை அறிமுகப்படுத்திய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் இனாமுர் ரஹ்மான் கான் வக்ஃப் சொத்துகளின் ஆவணப்படுத்தல் எளிதான பணியல்ல
உமீத் இணையதளத்தில் ஆவணங்களை பதிவேற்றுவது மிகவும் சவாலாக உள்ளது.
இந்த சவால்களை எதிர்கொள்ளவே உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த மையம் பதிவு தொடர்பான அனைத்து வசதிகளையும் வழங்கும் என்று அவர் கூறினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வக்ஃப் சொத்துகளின் பதிவை உறுதிப்படுத்துவதற்கு விரிவான அமைப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மாநில அளவில் வக்ஃப் குழுக்கள் அமைக்கப்பட்டு, இப்பணி முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய உதவி மையம் மற்றும் மாநில வக்ஃப் குழுக்களின் மேற்பார்வையில் நிரந்தர உதவி எண் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சட்ட வல்லுநர்கள்,
வக்ஃப் நிபுணர்கள் மற்றும் பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள் நிகழ்நேர வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குவதாகவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் கண்காணிப்பு குழுக்களின் வலுவான வலையமைப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பங்கேற்பாளர்கள் வலியுறுத்தப்பட்டனர்.
ஒவ்வொரு பகுதியிலும், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளூர் சமூக உறுப்பினர்களைக் கொண்ட வக்ஃப் பாதுகாப்பு குழுக்களை அமைத்து, வக்ஃப் சொத்துகளில் நடைபெறும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அல்லது அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளைக் கண்காணித்து முறையான ஆவணப்படுத்தல் மற்றும் பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், உமீத் இணையதளத்தில் வக்ஃப் சொத்துகளை பதிவேற்றுவதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வெளியிட்டது.
வக்ஃப் உதவி மையத்தின் தொடக்க விழாவில் ஜமாஅத்தின் மத்திய தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசிய செயலாளர்,
ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்
புது தில்லி