ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஓசூர் சார்பாக சீரத் ஒரு வழிகாட்டி என்ற சிறப்பு நிகழ்ச்சி நேற்று 28.9 25 ஞாயிறு மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துவக்கமாக மௌலவி முஹம்மத் சிராஜ் (மினா பள்ளி இமாம் ) அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.
ஜனாப் முஹம்மது அலி வரவேற்புரை வழங்கினார்.
ஓசூர் நாஸிம் முஹம்மது ஆரிப் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
தலைமை உரையில், சீரத் என்றால் என்ன என்பதை சுருக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் சிறப்பு பேச்சாளர் ஜனாப் அப்துல் ஹமீது (மண்டல அமைப்பாளர் JIH )அவர்களை அறிமுகப்படுத்தினார்.
சிறப்புரை ஆற்றிய ஜனாப் அப்துல் ஹமீது (மண்டல அமைப்பாளர் JIH ), நபிகள் நாயகம ( ஸல்) அவர்களுடைய சீரத் நமக்கு வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் படிப்பினை தரக்கூடியதாக, வழிகாட்டுகிறது என்பதை எடுத்துரைத்தார்.
மேலும் அண்ணல் நபிகளாரின் வாழ்க்கை வரலாறு நமக்கு முப்பரிமாணங்களில் வழிகாட்டுகிறது. அவை, 1. நடை உடை போன்ற அடையாளங்கள். 2. தொழுகை நோன்பு போன்ற வழிபாடுகள். 3. குடும்பவியல், பொருளாதாரம், வியாளில் முஸ்லிம்கள் ஆகிய நாம் சீரத்தை கருத்தூன்றி படித்து அதை நம் வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் செயல்படுத்தி காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இறுதியாக முஹம்மது ஆரிப் நன்றி கூறினார்கள். ஏறக்குறைய 25 பேர் கலந்துகொண்டு இதில் பயனடைந்தார்கள். அல்லாஹ் நமது முயற்சிகளை ஏற்றுக் கொள்வானாக.