ஆழ்ந்த இரங்கல்...
கரூரில்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிரச்சார நிகழ்வில்
கூட்ட நெரிசலில் சிக்கி 35க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான செய்தி பெரும் கவலையைத் தருகிறது.
இந்த பெரும் துயரில் உயிரிழந்த அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உறவுகளைப் பறிகொடுத்த குடும்பங்களுக்கு வல்ல இறைவன் அழகிய பொறுமையையும் இந்த துயரிலிருந்து கடந்து வரக்கூடிய மன திடத்தையும் தந்தருள்வானாக என்று இந்த நேரத்திலே பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.
மேலும்
பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று நலமுடன் இல்லங்கள் திரும்புவதற்கும் இறைவன் அருள் புரிவானாக என்றும் பிரார்த்திக்கின்றோம்.
இந்நிகழ்வில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மேலும் மருத்துவர்கள்,மருத்துவமனை ஊழியர்கள் அனைவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.
தக்க சமயத்தில் துரிதமாகச் செயல்பட்டதால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களும் இதுபோன்று மிக அதிகமான கூட்டங்கள் வருகின்ற பொழுது மிக நேர்த்தியான ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டும்.
காவல்துறை எந்த மாதிரியான அனுமதிகள் வழங்கி இருக்கிறார்களோ அதனை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பயீ
மாநிலத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு&புதுச்சேரி