News Channel

பத்திரிக்கை அறிக்கை

பத்திரிக்கை அறிக்கை
25 செப்டம்பர் 2025.

I love Mohamed 
‘நான் முஹம்மது நபியை நேசிக்கிறேன்’ என்ற கோஷங்களை குற்றமாக்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, 
அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு அவமதிப்பு: 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) அகில இந்திய துணைத் தலைவர் மலிக் மொஹ்தசிம் கான் அவர்கள் 
இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் மீது ‘நான் முஹம்மது நபியை நேசிக்கிறேன்’ என்ற பதாகைகள் மற்றும் கோஷங்களை வெளிப்படுத்தியதற்காக 
பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் (FIR) மற்றும் கைதுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் 
மாலிக் மொஹ்தசிம் கான் அவர்கள் கூறியதாவது:  
“நான் முஹம்மது நபியை நேசிக்கிறேன்’'என்ற கோஷம் சமூகப் பிளவைத் தூண்டும் என்ற கருத்து 
அடிப்படையில் பிழையானது மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், அனைத்து மதங்களையும் மதிக்கும் பண்பையும் அவமதிக்கும் செயல் ஆகும். 

பல நூற்றாண்டுகளாக 
இந்திய மக்கள் ஒருவரையொருவர் மதங்களின் உணர்வுகளை மதித்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். 

அரசியல் உள்நோக்கங்களும், சமூகப் பாகுபாட்டு 
காவல்துறை நடவடிக்கைகளும் 
தேவையற்ற பதற்றங்களை ஏற்படுத்தி, 
இணக்கமான சமூகத்தை பாதிப்படைய செய்கின்றன.

அவர் மேலும் கூறினார், “முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனைத்து மனித குலத்திற்கும் கருணையின் தூதராக உள்ளவர். அவர்மீது அன்பை வெளிப்படுத்துவதை குற்றமாக்குவது மிகவும் வருத்தத்திற்குரியது மட்டுமல்ல
அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. 

இது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19(1)(a) 
(பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்) மற்றும் பிரிவு 25 
(மதத்தை ஏற்றுக்கொள்ளுதல், மதத்தை பின் பற்றுதல்,
பிரச்சாரம் செய்தல்) ஆகியவற்றால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறுகிறது. 

அமைதியான மத வெளிப்பாடு சமூக இணக்கத்திற்கு அச்சுறுத்தல் அல்ல!
இது நமது தேசத்தின் ஒழுக்கப் பண்புகளை வலுப்படுத்தும் அடிப்படை உரிமையாகும்.

சிவில் உரிமைகளுக்கான பாதுகாப்பு சங்கத்தின் (APCR) தரவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் தொடங்கிய காவல்துறை நடவடிக்கை இப்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. 

குறைந்தது 21 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, 1,324 முஸ்லிம்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 
38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
உத்தரப் பிரதேசத்தில் மட்டும்
 (16 வழக்குகள், 1,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள்)
உத்தரகாண்ட், குஜராத், மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த சமமற்ற,அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒடுக்குமுறையை கடுமையாக விமர்சித்தார்.

கான்பூரில் நிர்வாகத்தால் செய்யப்பட்ட பிழைகளை ஒப்புக்கொண்டு திருத்துவதற்கு பதிலாக, 
அதிகாரிகள் வேண்டுமென்றே இந்த பிரச்சினையை தீவிரப்படுத்தி,
நாடு முழுவதும் பதற்றத்தை பரப்பியுள்ளனர். 

முஹம்மது நபியின் மீதான அன்பை அமைதியாக வெளிப்படுத்தியவர்களை இலக்காகக் கொள்வது 
அரசியல் சாசனத்திற்கு எதிரானது, 
சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துகிறது, 
மற்றும் ஜனநாயக நிறுவனங்களில் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது. 
இத்தகைய செயல்கள், புனையப்பட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்தி சமூகத்தைப் பிளவுபடுத்த முயல்கின்றன.

முஸ்லிம் சமூகம் இந்த பிரச்சினையை அறிவுரீதியாகவும்,
நம்பிக்கையுடனும்,
பதிலளிக்கும் வகையிலும் அணுகுமாறு 
அவர் வேண்டுகோள் விடுத்தார், 

மேலும் 
முஹம்மது நபி ஸல் அவர்களின் கருணை, நீதி, மற்றும் அமைதி குறித்த போதனைகளை எடுத்துரைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

அதேவேளையில்
அரசாங்கமும், காவல்துறையும் தவறான மற்றும் அதிகப்படியான முதல் தகவல் அறிக்கைகளை FIR உடனடியாக திரும்பப் பெறவும், தவறாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும், 
அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.  

அடிப்படை உரிமைகளை மதித்தல், 
மதப் பன்முகத்தன்மை, 
மற்றும் சமூக நல்லிணக்கம்  ஆகியவை இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மூலக்கற்கள். 

அமைதியான முறையில் 
I love Mohamed 
அன்பை,
வெளிப்படுத்துவதை
குற்றமாக்கும் முயற்சிகள் இந்த அஸ்திவாரங்களை அச்சுறுத்துகின்றன
என்று மலிக் மொஹ்தசிம் கான் அவர்கள் கூறினார்.

வெளியீடு:
சல்மான் அஹ்மத்  
தேசிய செயலாளர், 
ஊடகத் துறை, 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்   
புது தில்லி.