CIO - CHILDRENS ISLAMIC ORGANISATION திருப்பூர்
சிறுவர்கள், குழந்தைகள் சார்பாக
மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்
Hands in soil hearts with INDIA
என்ற மையகருத்தின் அடிப்படையில்
நாடுதழுவிய பரப்புரை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
10லட்சம் மரகன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் இறுதிகட்டமாக ஜூலை27 ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெற்றது
பசுமையினை பாதுகாக்கும் பேரணியாக நடைபெற்றது
இதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆர்வமாக பங்கு பெற்றனர் ஒரு மாதம் முழுவதுமாக பல இடங்களில் மரங்கன்றுகளை நட்டனர், பல சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு நிகழ்ச்சியின் மையகருத்தை எடுத்துரைத்தனர், பள்ளிகளில் அதிகமாக இதைபற்றி மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது
ஜூலை27, 2025 பேரணிக்காக பல ஏற்பாடுகள் CIO- சார்பாக மேற்கொள்ளப்பட்டது
இப்பேரணியை மாமன்ற உறுப்பினர் A.பெனாசீர் Mc அவர்கள் துவங்கிவைத்தார்கள் பேரணியின் தலைமையாக ஜனாப். A. முகமது காசிம் அவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த - திருப்பூர் முகாமி
தலைமையில் பேரணி முன்னெடுக்க பெண்கள் பிரிவு த டா தலைமை நாஜிமா ஹம்சாபேகம் மற்றும் Cio பொறுப்பாளர் பர்வீன் ஆகியோர் சிறப்பாக நிகழ்ச்சியினை வடிவமைத்தார்கள்
இது பசுமை பேசும் குழந்தைகளின் குரலாக இருந்தது
வரும் காலத்தில் மரங்களையும் இயற்க்கையை பாதுகாக்கும் விதமாக சமூகம் உருவாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லாத வண்ணமாக இந்த ஒரு மாத கால உழைப்பு அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது.
இது பசுமை பேசும் குழந்தைகளின் குரலாக எப்போதும் ஒலிக்க வேண்டும்
இந்த நிகழ்வை காவல்துறை சார்பாக அழகாக நடத்திகொடுத்தார் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பங்குபெறும் நிகழ்வாக இருந்தமையால் அதிகமான கவனம் கொடுத்தார்கள், ஜமாஅத் ஊழியர்கள் உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் சிறந்த ஒத்துழைப்பு கொடுத்தனர்