ரமலான் நகரில்
மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் பரப்புரை சம்பந்தமாக
நான்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
அகில இந்திய அளவில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்
CIO - children islamic organisation சார்பாக
"மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" என்ற தலைப்பில் நாடு தழுவிய பரப்புரை நடைபெற்று வருகிறது
அந்தப் பரப்புரையில் பங்களிப்பாக மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக
இராமநாதபுரம் ரமலான் நகரில் நடைபெற்றது
முதல் நிகழ்ச்சி :
14/07/25 திங்கட்கிழமை
அன்று மக்தப் மதரஸா மாணவி S.ஆஃபியா சனா அவர்கள் மரம் வளர்ப்பதும், அதன் சிறப்பும், அதனால் மண்ணுக்கும் மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள பயன்களை பற்றியும் இஸ்லாம் மரம் வளர்ப்பதை பற்றி என்ன கூறியுள்ளது என்பதைக் குறித்து சிறு உரை ஆற்றினார்கள்.
இரண்டாம் நிகழ்ச்சி;
15/07/25 செவ்வாய்க்கிழமை அன்று மாலை
மாணவ- மாணவிகளுக்கு மரம் வளர்ப்பதும் அதன் சிறப்புகளும் அதன் பயன்களையும் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜமாத்அதே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் ரமலான் நகர் ஜும்ஆ பள்ளி வாசல் தலைமை இமாம் ஷம்சுதீன் பைஜி அவர்கள் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு உரை ஆற்றினார்கள்.
மூன்றாம் நிகழ்ச்சி;
16/07/25 புதன் கிழமை அன்று காலை ஓவியம் தீட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 20 மாணவ மாணவிகள் பங்கெடுத்து இயற்கையின் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் அக்கறையையும் ஓவியம் மூலமாக வெளிப்படுத்தினார்கள்.
நான்காம் நிகழ்ச்சி;
16/07/25 புதன் கிழமை மாலை
🌲மரம் வழங்குதல், மற்றும்
🌲மரம் நடக்கூடிய நிகழ்ச்சி
ஜமாத் தலைவர் அன்ஸத் ரிஸ்வான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் மூலமாக 30 மரக்கன்றுகள் நடப்பட்டது.
-இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் - JIH