News Channel

போதை ஒழிப்பு பிரச்சாரம்

முஹமதியாபுரத்தில் போதை ஒழிப்பு பிரச்சாரம்

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் - JIH 
இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக
போதை ஒழிப்பு  பிரச்சாரம் ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை 
தொடர் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக போதை ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு 
7/7/2025 திங்கட்கிழமை 
முஹமதியாபுரத்தில்  சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் ஜமாத்துல் உலம வட்டார பொருளாளரும்
 ரமலான் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி சம்சுதீன் பைஃஜி அவர்கள் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக இராமநாதபுரம் புறநகர் ஊழியர் வட்டம் பொறுப்பாளரும்
முஹமதியாபுரம் இமாம்
அபுபக்கர் அவர்கள் கிராஅத் ஓதி அமர்வை
தொடங்கி வைத்தார்.
முகமதியாபுரம் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மௌலவி சம்சுதீன்
அவர்கள் போதையின்
தீமையை பற்றியும்
கை பேசியால் எற்படும்
தீமையை பற்றியும்
உரை நிகழ்த்தினார்கள்.

இந் நிகழ்வில்
ஆண்கள் பெண்கள் 
இளைஞர்கள் மாணவ
மாணவிகள் என
மொத்தம் 72 நபர்கள்
கலந்துகொன்டார்கள்.