News Channel

தனி நபர் சந்திப்பு பிரச்சாரம்

தனிநபர் சந்திப்பு பிரச்சாரம் 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஊராம்பட்டியில் போதை ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. 

போதை ஒழிப்பு சம்பந்தமான பிரச்சாரங்கள் பல நிகழ்வாக பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக நடைபெற்று வருகின்றது. 
அதில் ஒரு நிகழ்ச்சியாக ஊராம்பட்டியில் தனிநபர் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை போதை ஒழிப்பு தொடர் பிரச்சாரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராம்பட்டியில் தனிநபர் சந்திப்பை மேற்கொள்ளப்பட்டு போதை சம்பந்தமான ஆபத்துகளையும், பாதிப்புகளையும் மக்களுக்கு விழிப்புணர்வு செய்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டன. 
பெண்கள் இடத்திலும் போதை சம்பந்தமான பாதிப்புகள், போதையில் சிக்கியிருக்க கூடியவர்களுக்கான தீர்வுகளுக்கான வழிகள் என பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

50 நபர்களுக்கு பிரச்சாரத்தின் மூலம் செய்திகள் சேர்ப்பிக்கப்பட்டது‌ ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் ஊராம்பட்டி பள்ளிவாசல் இமாமான அக்பர் இக்பால் அவர்கள் அவர்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து சிறப்பாக வழி நடத்தினார்.