News Channel

மண்ணில் கைகள்..! இந்தியாவில் இதயங்கள்..!

  • ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குழந்தைகள் இஸ்லாமிய அமைப்பு சார்பாக நாடு முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகளை நடுவோம் என்ற உறுதி மொழியுடன் மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது இதன் ஒரு பகுதியாக கடந்த 28 6 2025 சனிக்கிழமை திருப்பூர். ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் குழந்தைகள் இஸ்லாமிய அமைப்பு சார்பாக அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது இந்த பரப்புரையினை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் விதமாக அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது 

  • குழந்தைகளுக்கு ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக CIO வின் பொறுப்பாளர் உரை நிகழ்த்தினார்கள்  
  • இயற்கை இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடை அதை மனிதன் பாதுகாக்க வேண்டும்.
  • இயற்கை வளங்களை பேணுவது மனிதனின் பொறுப்பாகும்.இதை மனிதன் தன் சுயநலத்தக்காகவோ, வீணாக்கவோ, பயன்படுத்தக் கூடாது.
  • இஸ்லாம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுகிறது.மரம் நடுதல்,பயிர்களை வளர்ப்பது போன்ற செயல்களை ஊக்குவிக்கிறது.
        இவ்வாறு உரை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டார்கள்