News Channel

மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் உடுமலை CIO பரப்புரை அறிமுக நிகழ்ச்சி

உடுமலை கிளை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பில் 30.06. 2025 திங்கட்கிழமை அன்று 
இரண்டு இடங்களில் பாலர்களுக்கான (CIO) அகில இந்திய அளவில் நடைபெறும் பரப்புரை "மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" என்ற பிரச்சார இயக்க அறிமுக கூட்டம் நடைபெற்றது. 

இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு உடுமலை கிளை மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி : A.மெஹராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.

பாலர் சங்க (CIO) பொறுப்பாளர் சகோதரி: ஆயிஷா அவர்கள் நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள்.

இந்நிகழ்வில் மரங்களின் தேவை, அவற்றைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய அவசியம், மற்றும் இயற்கை வளத்தின் முக்கியத்துவம் பற்றிய பல கருத்துக்கள் குழந்தைகளுக்கு உரைகளாக நிகழ்த்தப்பட்டது.

மேலும் குழந்தைகள் தங்கள் கரங்களால் செடிகள் நட்டு மகிழ்ந்தனர். 

இதில் 40 கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்