News Channel

போதை ஒழிப்பு பிரச்சாரம்

கோடாங்கி பட்டியில் போதை ஒழிப்பு பிரச்சாரம்

போதை ஒழிப்பு பிரச்சார
வாரத்தை  முன்னிட்டு 26.6.2025 வியாழக்கிழமை மாலை : 6:00 முதல் 
கோடாங்கி பட்டி பள்ளிவாசலில் 
முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாய
சொந்தங்களை அழைத்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேனி மாநகர ஜமாத்தின் தலைவர் ஜனாப் அபுதாஹிர் அவர்களும்
மற்றும் 
தேனி சமூக நல்லிணக்க பேரவையின் தலைவர் ஜனாப் முஹமது சபி அவர்களும் கலந்து கொண்டனர்.

கோடாங்கி பட்டி ஜமாத் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் துவக்கமாக 
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினறும்,கோடாங்கிபட்டி பள்ளிவாசல் இமாமுமானஆலிம் அபுபக்கர் தாஃவதி அவர்கள்
தலைமையேற்று நடத்தி தந்தார்.

 மேலும்,
கிராஅத் ஓதி அமர்வை
தொடங்கி வைத்தார்

தேனி அமீரே மகாமிஅபூதாஹிர் ராஜா அவர்கள்;
மதுவின் தீமைகளை
குறித்து பேசினார்கள்.

அதனைத் தொடர்ந்து தேனி சமூக நல்லிணக்க பேரவையின் தலைவர், ஜனாப்; 
முஹமது சபி போதை மறுவாழ்வு
மைய்யத்தை குறித்து பேசினார்.
இதில் சகோதர சமுதாய சொந்தங்கள் மட்டும்14 நபர்கள் கலந்து கொன்டார்கள்.
மேலும் முஸ்லிம் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக நிகழ்வுக்கு வருகை புரிந்த அனைவருக்கும் விருந்தும், தேனீரும் வழங்கப்பட்டது.