வாணியம்பாடி ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் சார்பாக, புனித ரமலான் மாத முடிவில் ஈகைத் திருநாள் மகிழ்ச்சித் தருணங்கள் ஹிந்து, கிறித்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் ஒரு இடத்தில் கலந்து கொண்டு கொண்டாடப்பட்டது...
இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்டம் அரசு ஷரீஅத் காஜி மௌலவி அப்துல் ரஹ்மான் மாதினி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்...
முக்கிய விருந்தினராக எழுத்தாளர் இயக்குனர் திரு. ஸ்ரீ ராம் சர்மா சிறப்புரை ஆற்றினார்...
பிறகு “சமரசம்” இதழ் பொறுப்பாசிரியர் திரு. வி. எஸ். முஹம்மத் அமீன் வினோத முறையில் முஸ்லிம்களின் உதவி செய்யும் குணங்கள் பற்றி சிறப்புரை ஆற்றினார்...
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராம் ஷர்மா அவர்களின் படைப்பு "கதீஜா (ர.அ) ஒரு உயர் நுண்மதிவாள பெண்மணி" உருது மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் வெளியீடப்பட்டது...
இறுதியில் ஜனாப் நரி முஹம்மது நயீம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
▪️நிகழ்ச்சி நடந்த நாள் :
5-04-2025 சனிக்கிழமை மாலை 7 மணி
▪️நிகழ்ச்சி நடந்த இடம் :
மாதினுல் உலூம் அரபிக் கல்லூரி, (வாணியம்பாடி M.L.A அலுவலகம் எதிரில்) ஜின்னா ரோடு, காதர்பேட்டை, வாணியம்பாடி
ஒருங்கிணைந்த குழு :
▪️வாணியம்பாடி முஸ்லீம் கல்வி சங்கம் (VMES)
▪️அல்ஹுதா லீட்ரேரி சுசைட்டி
▪️மாதினுல் உலூம் அரபிக் கல்லூரி
▪️விஸ்டம் பார்க் இன்டர்-நேஷ்னல் ஸ்கூல்
▪️இஸ்லாமிய தகவல் மையம் (IIC)
▪️காதரியா முஸ்லீம் கல்வி சங்கம்
▪️அஞ்சுமனே குத்தாமுல் இஸ்லாம்
▪️அஞ்சுமனே ரிபாஹே மில்லத்
▪️இஸ்லாமி பைத்துல் மால்
▪️இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)