"மசூதியில் விருந்து"
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் சார்பாக
மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி வாசலில்
"சகோதர சமுதாய சகோதர சகோதரிகளை"
பள்ளிவாசலுக்கு சிறப்பாக அழைக்கப்பட்டு
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில்
மதிய உணவு மசூதியில் வைத்து பரிமாறப்பட்டது.
அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரமலான் வாழ்த்துக்கள் பரிமாறி நன்றி பாராட்டி சென்றார்கள்.
மசூதியில் விருந்து என்பது அவர்களுக்கு மிக விருப்பமாகவும்,
மசூதியையும் பார்வையிட்டுச் சென்றார்கள்.
இன்றைய சூழ்நிலையில்
இந்த மத நல்லிணக்கம் எப்போதும் நம்மிடையே இருந்து கொண்டே இருக்க வேண்டும்
அதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் மிக முக்கியமானது என்றும் கூறி மகிழ்ந்தார்கள்.