News Channel

இஃப்தார் நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தஞ்சாவூர் வட்டம்
சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் விருந்துநிகழ்ச்சி மார்ச் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை  பெசன்ட் லாட்ஜில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக எஸ் எஸ் பழனி மாணிக்கம் முன்னாள் நிதித்துறை அமைச்சர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 
தஞ்சை மாநகர மேயர், துணை மேயர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஆகியோரும் பங்கேற்று இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய குடந்தை வி. ஃபக்ருதீன் அலி அஹ்மத்
அவர்கள் சமூக நல்லிணக்கம், 
சமூக நீதீ கண்ணோட்டத்தில் இன்றைய சமூக அவலங்களையும், அவற்றிற்க்கான இஸ்லாமியத் தீர்வுகளையும் எடுப்பாக எடுத்துக்கூறி சிறப்பு உரையாற்றினார்கள்.  

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புகளையும் உடன் சேர்த்துக்கொண்டு இந்நிகழ்வு ஓழுங்கு செய்யப்பட்டது. 
120 க்கும் மேற்ப்பட்ட நபர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.