ரமலான் மாதத்திலே தொடர்ந்து பல சமூக நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .
அதில் இன்று மன்னார்குடியில் அமைந்துள்ள மீட்டிங் பாயிண்ட் ரெஸ்டாரன்ட் நடைபெற்ற சமூக நல்லிணக்க நோன்பு துறக்கும் நிகழ்ச்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
நடத்தியது.
இந்த நிகழ்ச்சி மிகவும் மனதுக்கு விருப்பமான நிகழ்ச்சியாக அமைந்தது. சகோதர சமய
சகோதரர்கள் மிகவும் அதிக அளவில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றது மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
சமூகங்களுடன் இஃப்தார்-12
சகோ.ரிழா திருமறை ஓத மவ்லவி.அப்துல் முக்ஸித் ஸலாமி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
சகோ.அகமது தம்பி வரவேற்புரையுடன் கிளைத் தலைவர் சகோ.மன்சூர் அறிமுக உரை வழங்கினார்.
சகோ.ஃபக்ருதீன் அலி அகமத் அவர்கள் சமூகநல்லிணக்கத்தின் தேவையும் களச்சூழலும் என்ற கரைப்பொருளில் சிறப்புரையாற்றினார்.
CSI wesly சர்ச் பாதிரியார் திரு.சார்லஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த அமர்வில் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த சுமார் 90 நபர்கள் உட்பட சுமார் 130 நபர்கள் கலந்துகொண்டர்கள்