இப்தார் சங்கமம்
16.03.25 ஞாயிற்று கிழமை அன்று Sio இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்களால் உறவுகளுக்கும் தோழமைகளுக்கும் ஜமாத்தை அறிமுகப்படுத்தும் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள் - இதில் JIH மதுரை கிளையின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது.
இதில் JIH மதுரை கிளை மகாமி அமீர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில் நமது குறிக்கோளான தீனை நிலைநாட்டுவதன் பொருள் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுள்
தோய்வுற்று கிடக்கின்ற தீனின் அம்சங்களை புத்துயிருட்டி நிலை நிறுத்த முயற்சிப்பதே அதன் முக்கியமானதும் தொடக்க அம்சமுமாகும் என விவரித்தார். மேலும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் மாணவர்களிடையே ஒழுக்க மாண்புகளை வளர்பதிலும் Sioவின் வரலாற்றுபங்களிப்புயும் எடுத்துரைத்தார். ஏராளமான உறவுகளும் சகோதர சகோதரிகளும் பங்கேற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்