மிலாடி நபியை தொடர்ந்து சமத்துவ நாயகர் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற பரப்புரையின் கீழ் மன்னார்குடி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்து பல நிகழ்ச்சிகளை தொடா்ந்து நடத்திக் கொண்டு வருகிறது .
அதில் இப்போது சமத்துவ நாயகர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மாணவர்களுக்கு மத்தியில் அறிமுகம் படுத்தும்
நோக்கத்தில் மன்னார்குடி ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்தும் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பும் இணைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கான கட்டுரை போட்டி ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.
நடைபெறும் நாள் 18/10/2023 முதல் 31/10/2023 வரை ,
இதில் மன்னார்குடியை சுற்றியுள்ள பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்
கட்டுரை போட்டியில் மூன்று தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது .
தலைப்புகள்.
1)சமூக வலைத்தளங்களை ஆரோக்கியமாக பயன்படுத்துவதில் மாணவர்களின் பங்கு.
2)சமத்துவ நாயகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றி .
3)போதை ஒழிப்பில் மாணவர்களின் பங்கு.
இந்த தலைப்பின் கீழ் மாணவர்கள் கட்டுரை எழுத வேண்டும் இந்த கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 3000ரூபாய் ,இரண்டாவது பரிசு 2000 ரூபாய், மூன்றாவது பரிசு 1000, என பரிசுத்தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது
ஏ4 சீட்டில் ஐந்து பக்கங்களுக்கு குறையாமல் அந்த கட்டுரை இருக்க வேண்டும் கட்டுரையை அனுப்ப வேண்டிய இறுதி நாள் 31/10/2023 இதில் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி :
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
18 மஸ்தான் பள்ளி தெரு மன்னார்குடி