News Channel

சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.
அஸ்ஸலாமு அலைக்கும் நன்மைகள் பூத்துக் குலுங்கும் இந்த ரமலான் மாதத்தில் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் .
நம்முடைய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அனைத்து மக்களோடும் இணைந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வந்து கொண்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் இந்த வருடமும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திய வண்ணம் இருக்கிறது.
ஒரு காலத்திலே நோன்பு திறக்கின்ற நிகழ்ச்சி எப்படி நடக்கும் என்றால் மக்களை நம்முடைய இடத்திற்கு வரவழைத்து நோன்பு திறப்பது தான் வழக்கம்.
ஆனால் போன வருடத்திலிருந்து நம் இருக்கும் இடத்திற்கு மக்களை அழைப்பதை விட்டுவிட்டு அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நாம் சென்று மக்களோடு மக்களாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தியது வந்து  அதன் அடிப்படையில் இந்த வருடமும் அதே பாணியில் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை மன்னார்குடி ஜமாத் நடத்தி வருகிறது இதுவரை மன்னார்குடியில் உள்ள நான்கு இடங்களுக்கு மேற்பட்ட இடத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறது.
முதல் இஃப்தார் அமர்வு மன்னார்குடி கிளை கார்கூன் சகோதரி.பீபீ ஜான் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இதில் கிளை மகளிரணி பொறுப்பாளர் சகோ. சஹானாஸ் அவர்கள் ரமலான் கூறும் சமூக என்ற கருப்பொருளில் உரையாற்றினார்.இந்த அமர்வில் பிறசமூக மக்கள் 4 பேர் அவர்கள் பிள்ளைகளுடன் கலந்துகொண்டனர். நோன்பு திறந்த பிறகு அவர்களுக்காக இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற கருப்பொருளில் சுமார் 20 நிமிடங்கள் அவர்களுடன் கலந்துரையாடினர். 
*2-ஆம் அமர்வு*
2-ஆம் இஃப்தார் அமர்வு மன்னார்குடி கிளை கார்கூன் சகோ.முகமது ஜபருல்லா இல்லத்தில் நடைபெற்றது.
இதில் கிளை Sio பொறுப்பாளர் மவ்லவி.அப்துல் முக்ஸித் ஸலாமி அவர்கள் ரமலான் கூறும் சமூக மாற்றம் என்ற கருப்பொருளில் உரையாற்றினார்.இந்த அமர்வில் பிறசமூக மக்கள் சுமார் 20 நபர்கள் கலந்துகொண்டனர். சுமார் 30 முஸ்லீம் சமூகத்தினர் கலந்துகொண்டனர். நோன்பு திறந்த பிறகு அவர்களுடன் உரையாடல் நடைபெற்றது.
*3-ஆம் அமர்வு*
3-ஆம் இஃப்தார் அமர்வு மன்னார்குடி கிளை கார்கூன் சகோ.அகமது தம்பி இல்லத்தில் நடைபெற்றது.
இதில் கிளை Sio பொறுப்பாளர் மவ்லவி.அப்துல் முக்ஸித் ஸலாமி அவர்கள் ரமலான் கூறும் சமூக மாற்றம் என்ற கருப்பொருளில் உரையாற்றினார்.இந்த அமர்வில் சகோதர சமுதாயமக்கள்  10 நபர்கள் கலந்துகொண்டனர். சுமார் 65 முஸ்லீம் சமூகத்தினர் கலந்துகொண்டனர். *சமூகங்களுடன் இஃப்தார்*
*4-ஆம் அமர்வு*
4-ஆம் இஃப்தார் அமர்வு மன்னை இஸ்லாமிய தோழமைகள் (MIT) சார்பாக Eurokids பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கிளை *Sio பொறுப்பாளர் மவ்லவி.அப்துல் முக்ஸித் ஸலாமி *அவர்கள் திருமறை ஓத துவங்கி வைக்க, MIT பொருளாளர் சகோ.MRK நாசர் இவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
*சகோ. கமாலுதீன்
(தலைவர்,சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு,தமிழ்நாடு)*அவர்கள் ரமலான் கூறும் சமூக மாற்றம் என்ற கருப்பொருளில் உரையாற்றினார்.இந்த அமர்வில்  மன்னார்குடி நகராட்சி சேர்மன்,துணை சேர்மன் ஆகியோர் பங்கேற்றனர்.
சகோதர சமுதாயமக்கள்  சுமார்40நபர்கள் உட்பட மொத்தம் 125 நபர்கள் கலந்துகொண்டனர்.