ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் குரயூரில் 23 .2. 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது .
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விருதுநகர் SIO தலைவர் மௌலவி, அப்துல் ரஹீம் சுஹைப் ஸலாமி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு குராயூர் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இச்சிறப்பு நிகழ்ச்சியை குராயூர் ஜும்மா பள்ளிவாசல் இமாமும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியருமான மௌலவி, அப்துல் கரீம் இனாமி அவர்கள் வழி நடத்தினார்.
இச் சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மவுலவி, அப்துல் ரஹீம் சுஹைப் ஸலாமி அவர்கள் ரமலானே வருக ! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அவர் தங்கள் உரையில் கூறுகையில்... ரமலான் மாதம் என்பது மனித வாழ்வில் அவனுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் அந்த பொக்கிஷத்தை உணர்ந்தவர்களாக அதை அடைய வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு யாரெல்லாம் ரமலானில் அமல்கள் செய்கிறார்களோ! அவர்கள் எண்ணிப் பார்க்காத அளவிற்கு நன்மைகளை அடைகின்றார். அதன் விளைவாக அவருக்கு சுவனத்தை அல்லாஹுத்தஆலா உறுதியாக்குவதாக அல்லாஹுத்தஆலாவும் அல்லாஹ்வுடைய தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறி இருக்கிறார்கள்.
ரமலானை பொறுத்த வரைக்கும் நாம் செய்கின்ற எந்த ஒரு காரியம் ஆனாலும் அதை
* மனத்தூய்மையோடு
* விருப்பத்தோடு
* ஆசையோடு
* கூலியை எதிர்பார்த்து
செய்கின்ற பொழுது அல்லாஹுத்தஆலா அதை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு கூலி வழங்குவதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு சகோதரனைப் பார்த்து நாம் புன்னகைப்பது கூட தர்மம் ஆகின்ற நோன்பு அல்லாத மற்ற காலங்களில் ரமலானில் சற்று எண்ணி பாருங்கள்!
அல்லாஹுத்தஆலா நோன்பு திறப்பதற்கு ஒரு நோன்பாளிக்கு உதவி செய்கின்ற பொழுது ஒரு நோன்பாளிக்கு கிடைக்கக்கூடிய கூலியை போன்று அந்த
நோன்பு திறக்க உதவி செய்ய கூடியவருக்கும் சேர்க்கப்படுகிறது என்று சொன்னால். இப்படி ஒரு மனிதன் 30 நாளும் இன்னொரு நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க கொடுக்கின்ற பொழுது அவருடைய கணக்கு எப்படி ஆகின்றது?
60 நோன்பு நோற்றத போன்ற அவர் நன்மைகளை அடைந்து கொள்கிறார்.
இப்படி ரமலானில் இருக்கக்கூடிய அனைத்து வகையான நன்மைகளும் நாம் எண்ணிப் பார்க்காத வகையில் நமக்கு வந்து சேருகிறது என்பதை அவருடைய உரையில் மிக அழகிய முறையில் எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி துஆ வுடன் இனிதே நிறைவடைந்தது.
இடம்: குராயூர்