News Channel

ரமலானே வருக !

ரமலானே வருக! 

சிறப்பு நிகழ்ச்சி இராமநாதபுரம்- முகமதியாபுரம் பகுதியில்20.2. 2025 வியாழக்கிழமை மாலை 6:30 முதல் 8:30 மணி வரை நடைபெற்றது. 

இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச் செயலாளர் ஜனாப்: நஜீர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டார்கள். 

இந்நிகழ்ச்சிக்கு முகம்மதியாபுரம் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முகமதியாபுரம் ஜும்மா பள்ளிவாசல் இமாம் அவர்கள் திருமறை வசனத்தை வாசித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் கோடாங்கி பட்டி ஜும்மா பள்ளிவாசல் இமாம் ஆலிம் ,அபூபக்கர் தாஃவதி அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அழகுற வழிநடத்தி தந்தார். 

ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்கள் ரமலானே வருக! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அவர் உரையில் கூறுகையில்... ரமலான் மாதத்தை குறித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு நினைவூட்டிய வண்ணமே இருந்தார்கள். இப்பொழுது நடைபெறுகின்ற இந்த ரமலானே வருக நிகழ்ச்சி என்பது நிர்வாகம் முடிவு செய்யப்பட்டு நடத்தப்படுகின்ற நிகழ்ச்சி அல்ல! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய 
* குடும்பத்தார்களையும் 
* உறவுகளையும் 
* சமூகத்தையும் 
* ஷாபான் மாதத்தில் கடைசி பகுதியில் 
* மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள் 

மனிதர்களே! அருள்வலம் மிக்க மகத்துவமிக்க பரகத் புரிந்த மாதம் ஒன்று உங்களை அடைய காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதற்கு தயாராகிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள் .

ஆக இந்த நிகழ்ச்சி என்பது இது சுன்னத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த சமூகத்திற்கு காட்டிக் கொடுக்கப்பட்ட சுன்னத்துகளில் இது ஒரு சுன்னத் ஆக இந்த நிகழ்ச்சியை நீங்கள் இபாதத்தாக பார்க்க வேண்டும்.
இந்த ரமலானில் நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹுத்தஆலா பல மடங்கு கூலியை தருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறான். 
இவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந்த மாதத்தை 
* நாம் எப்படி அணுக வேண்டும் 
* இந்த மாதத்திற்கு நாம் எப்படி தயாராக வேண்டும் 
* நம்முடைய உள்ளம் 
* நம்முடைய சிந்தனை எந்த தரத்தில் இருக்க வேண்டும் 

என்பதை சுட்டிக்காட்டி அல்லாஹுத்தஆலா இந்த மாதத்தில் பல சிறப்புகள் வைத்திருந்தாலும் நாம் தொழுகின்ற தொழுகை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்; 
* ஒரு நபில் தொழுதால் சுன்னத் உடைய நன்மை கிடைக்கிறது
* சுன்னத் தொழுதால் பர்ளுடைய நன்மை கிடைக்கிறது. 
* ஒரு ஃபர்லை நிறைவேற்றினால் அல்லாஹ் நாடினால் ஒன்றுக்கு 10 லிருந்து 70 . 70 வது லிருந்து 700 வரை நன்மைகள் நமக்கு கிடைக்க இருக்கின்றன 
* இந்த மாதத்தில் நாம் தொடுவதெல்லாம் நன்மையாக மாறுகின்றன 
* நல்ல எண்ணத்தோடு எண்ணுவது நன்மையாக மாறுகிறது
* நல்ல சிந்தனையோடு பேசுகின்ற பேச்சு நன்மையாக மாறுகின்றன 
* கண்ணியமான பார்வை நன்மையாக மாறுகின்றன 
* நாம் செய்கின்ற உதவி நன்மையாக மாறுகின்றன 

ஆக இந்த மாதம் முழுவதும் நன்மைகள் பூத்துக் குலுங்க கூடிய மாதமாக நம்மை வந்து அடைய காத்திருக்கிறது ஆகவே நம்முடைய வாழ்வில் மீண்டும் ஒருமுறை இந்த ரமலான் அடைய  இருக்கின்றது .
அந்த ரமலானை வரவேற்று அதில் அமல்கள் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு துஆ திக்ரு போன்ற விஷயங்களில் நம்மை ஆட்படுத்தி அல்லாஹுத்தஆலா நோன்பாளிகளுக்கு என்று தயார்படுத்தி வைத்திருக்கின்ற  ரய்யான் என்ற சுவன வாசலில் நாம் நுழைய வேண்டும். அதற்கு தகுதி உடையவர்களாக மாற வேண்டும் அல்லாஹுத்தஆலா அப்படியான பாக்கியத்தை தர வேண்டும் என்று இன்னும் பல செய்திகளை மிக அழகிய முறையில் அவர்கள் உரையில் எடுத்துரைத்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் முகமதியாபுரம் முஸ்லிம் ஜமாத்தார்கள் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் மாணவ மாணவிகள் என 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
வருகை புரிந்த அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. 
நிகழ்ச்சி துஆ உடன் இனிதே நிறைவடைந்தன.

இடம் : முஹமதியாபுரம் - இராமநாதபுரம்