News Channel

ஆலிமாக்கள் மாநாடு


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி
 சார்பாக ஏற்பாடு செய்திருந்த

 ஆலிமாக்களுக்கான மதுரை மண்டல மாநாடு வியாழக்கிழமை
16/01/2025 மதுரை விஸ்வநாத புறம் பகுதியில் உள்ள ரங்கா மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில்
ஆலிமா நஜ்மா சுல்தானா கிராத் ஓதினார்கள்

மதுரை மகளிரணி பொறுப்பாளர் ஜெரினா யூசுப் 
வரவேற்புரையாற்றினார்கள்

 மாநிலத் தலைவர் மௌலவி  A.முஹம்மத் ஹனிஃபா மன்பயீ தலைமையுரையாற்றினார்கள்

 மாநில துணைத் தலைவர் 
K.M சிராஜ் அஹமது தொடக்க உரையாற்றினார்கள்.

சமுதாய புத்தமைப்பில் ஆலிமாக்களின் பங்களிப்பு என்ற தலைப்பில்
 ஆலிமா சுமையா ஹாதியா.
கோவை ஹிதாயா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் சிறப்பரையாற்றினார்கள்.

தீனை நிலைநாட்டுவதில் ஆலிமாக்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் 
மௌலவி நூஹ் மஹ்ளரி. திருச்சி அஸ்ஸலாம் அரபிக்கல்லூரி பேராசிரியர் சிறப்புரையாற்றினார்கள்

தேனி மண்டல மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி பரிதா அபுதாஹிர் நிறைவுறையாற்றினார்கள்.

 
அல்ஹம்துலில்லாஹ்.
 மதுரை,கம்பம்,தேனி,போடி, திண்டுக்கல், சின்னமனூர்,
உத்தமபாளையம், மேலூர் விருதுநகர், திருமங்கலம்,தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 225 பேர் கலந்து கொண்டனர் அதில் 175 பேர் ஆலிமாக்கள்  
 பங்கேற்றார்கள்.