#இளைஞர்கள் தினம் நிகழ்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 அன்று தேசிய இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு, 1984ல், தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.
தேசிய இளைஞர் தினம் என்பது இளைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாள். இந்த நாள் இளைஞர்களுக்கான புரிதல், பாராட்டு மற்றும் பொறுப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் மூலம் தேசிய இளைஞர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அனுசரிக்கப்படுகிறது. ஊர்வலங்கள், இளைஞர் மாநாடுகள், உரைகள், கருத்தரங்குகள் மற்றும் பிற நிகழ்வுகள் ஜனவரி 12 அன்று தேசிய இளைஞர் தினத்தைக் குறிக்கின்றன. மேலும், நாட்டைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்கு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளைஞர்கள் தங்கள் ஆற்றலையும் நேரத்தையும் பயன்படுத்தி தங்கள் நாட்டை நேர்மறையாக வளர்க்க வேண்டும் என்ற வகையில் இந்தியா தேசிய இளைஞர் தினத்தை கொண்டாடுகிறது.
தற்போதுள்ள சமூக சூழ்நிலையில் இளைஞர்கள் சமூகப் பொறுப்பை உணராத இளைஞர்களாக பெருகி இருப்பதையும், நாட்டில் நிலவக்கூடிய லஞ்சம், லாவண்யம், ஒழுக்க கேடுகள் குறித்து அக்கறையற்ற நிலையில் இருப்பதையும் உணர முடிகின்றது.
ஆகவே, இந்நிலையை மாற்றியமைப்பதில் ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக ஜனவரி 12 அன்று இளைஞர்களை சந்தித்து இளைஞர்கள் தின வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களின் பொறுப்பை உணரக்கூடிய வகையில் சிறிய கலந்துரையாடல்களையும் நடத்தப்பட்டன.
👉மக்கா நகர்
👉தீன் நகர்
👉ரமலான் நகர்
👉ஓடைகுளம்
👉ஊராம்பட்டி
இன்னும்
பல பகுதிகளில் இளைஞர்களை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.