News Channel

கடையநல்லூர் ராபிதத்துல் உலமாவின் ஆலோசனை கூட்டம்

06/07/1446 (07/01/2025)
செவ்வாய்க்கிழமை
 காலை 10:00 மணி  முதல் 12:00 மணி வரை
அல்லாஹ்வின் அருளால் கடையநல்லூர் ராபிததுல் உலமா சார்பாக ஜாமிவுல் அன்வார்  பள்ளிவாசலில் வைத்து மாநாட்டின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
மௌலவி K.A. அஹமது முஹ்யித்தீன் ஃபைஜி அவர்கள் தலைமையுரை  ஆற்றினார்கள், 
கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முதல்வரும், தென்காசி மாவட்ட ஜமாத்துல் உலமா செயலாளரும், தென்காசி மாவட்ட அரசு காழி  A.Y. முகைதீன் ஃபைஜி, பாஸில்  ராஷாதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 
மௌலவி முஹ்யித்தீன் குட்டி உமரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். 
கடையநல்லூர் வட்டார ஜமாஅத்துல் உலமா செயலாளர் மௌலவி இப்ராஹிம் அன்வாரி அவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமியுடன் தனக்கு உண்டான தொடர்பு மற்றும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். இறுதியாக வந்திருந்த ஆலிம்கள் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டார்கள் மாநாட்டில் தாங்கள் கலந்து கொள்வதற்கு விருப்பமும் தெரிவித்தார்கள். 
இந்த நிகழ்ச்சியில் 50 ஆலிம்கள் பங்கேற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.  கடையநல்லூர் வட்டார ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் பொறுப்பாளர்கள் இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!!
அல்லாஹ் நமது தூய எண்ணங்களை பணிகளை ஏற்றுக் கொள்வானாக!!!