*"விவசாயிகள் தினம் சந்திப்பு நிகழ்ச்சி"*
JIH-ஜமாஅத் தே இஸ்லாமிய ஹிந்த் இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக விவசாய தினம் கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் டிசம்பர் 23 ம் தேதி விவசாய தினமாக அனுஷ்டிக்கப்பட்ட வருகின்றது.
மனித வாழ்வின் அடிப்படைத் தேவை , உணவும் , ஆடையும் தான். உணவு பெற்றுக் கொள்வதற்கு நெல் தேவைப்படுகிறது .
ஆடை பெற்று கொள்வதற்கும் பருத்தி தேவைப்படுகிறது. கட்டுமான பணிகளுக்கும் மரங்களும், மருத்துவ பொருட்களும், வாசனை திரவியங்களுக்கும் இன்னும் ஏராளமான விஷயங்களுக்கு விவசாயம் மட்டுமே மூல காரணமாக இருக்கின்றது.
விவசாய தினம் உருவான வரலாறு
---------------------------------
விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவரான சவுத்ரி சரண் சிங், 1979ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர். குறுகிய பதவிக்காலத்திலேயே, விவசாயிகளின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் பல நலத்திட்டங்களை உருவாக்கினார்.
சவுத்ரி சரண் சிங்கின் பங்களிப்புக்காகவும், ஒரு விவசாயி நாட்டின் பிரதமராக மாறியதை கவுரவிக்கும் வகையிலும், அவரது பிறந்த நாளான டிசம்பர் 23 ஆம் தேதியை
தேசிய விவசாயிகள்
தினமாகக் கொண்டாடுவதாக இந்திய அரசு கடந்த
2001ஆம் ஆண்டில் அறிவித்தது. அதன்படி டிசம்பர் 23 ம தேதியை
தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நம் நாட்டின் முதுகு எலும்பு விவசாயம் என்பதாக சொல்கின்றோம் ஆனால் விவசாயிகள் படக்கூடிய கஷ்டத்தை பார்த்தால் சொல்ல முடியாத அளவிற்கு விவசாயிகள் கஷ்டம் அடைகிறார்கள்.
விவசாயிகள் இறப்பு
---------------------------
மனிதர்கள் உயிர் வாழ்வதற்காக மண்ணில் இறங்கி விவசாயம் செய்து வாழவைக்கும் விவசாயிகள் அவர்கள் அடிப்படைத் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தற்கொலை செய்து மாண்டு வருவது வேதனையிலும் வேதனையாக இருக்கிறது. விவசாயிகளுக்கான விடிவு காலம் இன்று பிறக்குமா நாளை பிறக்குமா என்று எதிர்பார்க்கக் கூடிய இந்த வேலையில். விசாயிகளின் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
* 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 10 வருட காலகட்டத்தில் கிட்டத்தட்ட 13 லட்சம் விவசாயிகள் இறந்து போயிருக்கிறார்கள்.
* 2011 ம் ஆண்டு மட்டும் சட்டீஸ்கரீல் 1555 விவசாயிகள் இறந்து போயிருக்கிறார்கள்.
* 2017 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் ஆறு விவசாயிகள்
* டெல்லியில் நடந்த விவசாய போராட்டத்தில் பல விவசாயிகள்
* 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையில் நடந்த போராட்டங்களில் பல விவசாயிகள் இறந்த செய்தியையும் பார்க்கிறோம்.
விவசாயிகள் படக்கூடிய கஷ்டங்கள், அவல நிலைகள் ஏராளம் ஏராளமாக இருக்கின்றன.
தற்போது சூழ்நிலையில் விவசாயம் என்பதே மிகவும்
அறிதாகி விட்டது
மட்டுமல்ல...! இன்றைக்கு விவசாயம் அழிந்து கொண்டே இருக்கிறது.
இளைய தலைமுறைகள் விவசாயம் செய்வதை விரும்புவதில்லை, புதிய விவசாயிகள் உருவாகுவதில்லை! தற்போதுள்ள விவசாயிகள் கூட தங்கள் பிள்ளைகளை விவசாயத்தில் நுழைவிப்பதில்லை!
காரணம், தாங்கள் படக்கூடிய கஷ்டம் தங்களோடு முடிந்து விடட்டும் என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
விவசாயமும் / இஸ்லாமும்
----------------------------------
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் பல நபிமார்களும் சஹாபாக்களும் செய்த தொழில் விவசாயம்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை விவசாயம் என்பது ஒரு இபாதத் என்பதாக சொல்லப்படுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதையை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து அதன் விளைச்சலை அல்லது காய்களை, பறவையோ அல்லது பிராணியோ உண்டால் தர்மம் செய்வதற்கான நன்மை கிடைக்கின்றன என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.
சூழ்நிலையில்தான் ஜமாத்தை இஸ்லாமிக் இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டத்தின் சார்பாக டிசம்பர் 23 ம் தேதியில் விவசாய தினத்தில் விவசாயிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டன.
அவ்வகையில் டிசம்பர் 23ஆம் தேதி அன்று
* மதுரை மாவட்டம்
* ராமநாதபுரம் மாவட்டம்
* விருதுநகர் மாவட்டம்
* தேனி மாவட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள
* மதீனா நகர்
* மக்கா நகர்
* அணைக்கரைப்பட்டி
* சொக்க நாதன் பட்டி
* ஊராம் பட்டி
* குராயூர்
* கோடாங்கி பட்டி
ஆகிய ஊர்களில் விவசாய நிலங்களுக்கே சென்று விவசாயிகளை சந்தித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.