மனித உரிமை தினம்
சிறப்பு நிகழ்ச்சி
JIH-ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் சிக்கல் வட்டம் சார்பாக மனித உரிமை தினம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் வட்டத்தின் சார்பாக கடந்த 10.12.2024 அன்று மாலை 6:00 மணி அளவில் மறவாய்குடியில் மனித உரிமை தினம் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு சிக்கல் வட்டம் பொறுப்பாளர் ஆலிம் ஷேக் முகமது அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியை ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர் ஆலிம் முஹம்மது ரபிக் அவர்கள் வழி நடத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்புரை ஓடைக்குளம் ஜும்மா பள்ளிவாசல் இமாம் மற்றும் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் ஊழியருமான மௌலவி ஆதம் அலி பைஜி அவர்கள் மனித உரிமை தினம் தலைப்பில் சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்ச்சிக்கு மறவாய் குடி ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்புரையில் கூறியதாவது...
மனித உரிமைகளை மேற்கத்திய உலகம் தான் இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்ததாக கூறப்பட்டு வருகின்றது. ஆனால் இஸ்லாம் 1450 ஆண்டுகளுக்கு முன்பாகவே மனித உரிமை குறித்து சொல்லப்பட்டது. மேலும் இஸ்லாம் மனித உரிமை குறித்து பேசியது போல் எந்த சித்தாந்தமும்
சொல்லப்படவில்லை. இஸ்லாம் 1500 ஆண்டுகளுக்கு முன்பாகவே குர்ஆனின் மூலமாக மனித குலத்துக்கு தேவையான அனைத்து வகையான உரிமைகளையும் எடுத்து கூறி இருப்பது குர்ஆன் மூலமாக சான்று பகர்கிறது.
எங்கு மனித உரிமை மீறப்பட்டாலும் அது தவறுதான் மனித உரிமை காக்கப்பட வேண்டும் இஸ்லாம் அதை 1500 ஆண்டுகளுக்கு முன்பாகவே வழங்கிவிட்டது. அதை கடைபிடித்தோம் என்றால் மனித குல மகிழ்ச்சியாக இருக்கும் என்று அவர் கூறினார்...
இந்நிகழ்ச்சிக்கு மறவாய் குடி மக்கள் ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தவர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டு துஆ வுடன் இனிதே நிறைவடைந்தது.