பத்திரிக்கை அறிக்கை
25.11.2024
புதுடெல்லி :
உத்திர பிரதேசம்
சம்பலில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) துணைத் தலைவர்
மாலிக் முத்தஸிம் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாலிக் முத்தஸிம் கான் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில்,
"உத்தரபிரதேசத்தின் சம்பலில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களின் உயிரைப் பறித்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
காவல்துறையின் இந்த தன்வரம்புமீறிய சம்பவம் அரசின் அடக்குமுறை மற்றும் பாரபட்சத்திற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும், மேலும் இது ஜாதி, மதம் என்ற பாகுபாடின்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுள்ள கண்ணியம் மற்றும் வாழ்க்கைக்கான அரசியலமைப்பு உரிமை மீறுதலாகும்.
மசூதி கமிட்டியின் தரப்பை கேட்காமல் கணக்கெடுப்புக்கு உத்தரவிடபட்ட முடிவு, நீதித்துறையின் நேர்மையில் களங்கத்தை எற்படுத்தியுள்ளது. விசாரணைக் குழுவுடன் ஆத்திரமூட்டும் சமூகவிரோதிகள் இருப்பதும், அவர்களின் அடாவடித்தன நடவடிக்கைகள் மதமோதல்களை ஏற்படுத்தி அநியாயமாக அப்பாவிகளின் உயிர்களை பலி வாங்கியுள்ளது.
"இந்த சம்பவத்திற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கும்
அதனால் பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க, இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட கோருகிறோம்.
1947 இல் இருந்தது போல் இருக்கச் செய்யும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம்- 1991- என்ற
மதத் தலங்களைப் பாதுகாக்கும் சட்டத்தை நிலைநிறுத்துவது கட்டாயமாகும்.
அதன் உண்மையான அர்த்தத்தையும் காரணத்தையும்
நீர்த்துப்போகச் செய்யும் எந்த முயற்சியையும் அனைத்து கோணத்திலும் எதிர்க்கப்படுவது இன்றியமையாததாகும். முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து, பழங்காலத்தில் இந்துக் கோயில் இருந்ததாகக் கூறி, சட்டவிரோதமாக அவற்றைக் கையகப்படுத்த முயற்சிக்கும் இந்தப் போக்கை நிர்வாகமும், உயர் நீதித்துறையும் தடுக்கும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.
அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணி, பதற்றத்தை அதிகரிக்கச் செய்யாமல் அமைதியை நிலைநாட்ட காவல்துறை பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
"இந்த கடினமான காலங்களில் பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், பழிவாங்கலைத் தவிர்க்கவும் மற்றும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் கேட்டுக்கொள்கிறோம். நீதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் இந்த அநீதிகளுக்கும், நம் நாட்டில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் முயற்சிகளுக்கும் எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது தேசத்தின் நலனுக்காகவும்,
இதுபோன்ற அரச அடக்குமுறை சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை அரசாங்கமும் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்," என
JIH துணை தலைவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
வழங்கியவர்:
சல்மான் அஹ்மத்
தேசிய ஊடக செயளாலர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
புதுடெல்லி.
https://www.facebook.com/share/p/1E7w8wvv4a/