News Channel

மசூதிக்கு வாருங்கள் சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி

மசூதிக்கு வாருங்கள்
ஓர் நல்லிணக்க அழைப்பு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக மசூதிக்கு வாருங்கள் (Visit Our Mosque) சகோதர சமுதாயத்தினருக்கான சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி ஹவுசிங் போர்டு பிலால் மஸ்ஜிதில்  24.11.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி முதல் மதியம்2.00  மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக இறை வசனம் பிலால் மஸ்ஜிதின் இமாம் மௌலானா ரபீக் அஹ்மத் ஓதினார் அதன் தமிழாக்கத்தை சகோ பையாஸ் அஹமத் வாசித்தார்.

 பிலால் மஜீத்தின் தலைவர் ஜனாப் சையத் இர்பானுல்லாஹ் உசைனி தலைமை உரை ஆற்றினார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் தலைவர் ஜனாப் சிபகத்துல்லாஹ் ஜமாத் பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.

கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திரு கோவிந்தராஜ்,
ஹவுசிங் போர்டு பகுதி 2 குடியிருப்போர் நலச்சங்கம் செயலாளர் திரு தங்கவேல்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் திரு ஏகாம்பவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், புதுச்சேரி மண்டல பொறுப்பாளர் ஜனாப் அப்துல் ஹமீத் அவர்கள் பள்ளிவாசலின் நோக்கம் ,தொழுகை முறை, திசை நோக்கி தொழுவது, உடல் தூய்மை ( ஒளு) செய்வது ஆகியவை பற்றி செயல்முறையில் நடத்தி காண்பித்தார் பிறகு சகோதரர்களின் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்து நிறைவுறை ஆற்றினார்.
ஜொஹர் (Luhar)  தொழுவதை நேரில் பார்த்தனர்.
 
நிகழ்ச்சியை ஜனாப் இப்ராஹிம் வழி நடத்தினார்.

நிகழ்ச்சியில் பிலால் மஸ்ஜித் நிர்வாகிகளும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
 
இறுதியாக அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. 50க்கும் மேற்பட்ட சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த அன்பர்கள் கலந்து கொண்டனர்.
 
எல்லா புகழும் இறைவனுக்கே